சென்னை

சென்னைக்கு ஓமன் நாட்டில் இருந்து வந்த விமானத்தில் 113 பேர் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் தங்கம் உள்ளிட்ட பல பொருட்கள் கடத்தப்படுவதும் அதைச் சுங்க அதிகாரிகள் கண்டு பிடித்து பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   ஆனால் ஒரே விமானத்தில் பயணம் செய்தவர்களில் 113 பேர் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னைக்கு ஓமன் நாட்டில் இருந்து ஒரு விமானம் வந்துள்ளது.  வழக்கம் போல சுங்கத்துறையினர் பயணிகளைப் பரிசோதித்த போது அந்த ஒரு விமானத்தில் மட்டும் 113 பேர் கடத்தல்காரர்களாக இருந்தது சுங்கத்துறை அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

அந்த 113 பேரிடம் இருந்து 13 கிலோ தங்கம், 120 ஐபோன்கள், 84 ஆண்டிராய்ட் போன்கள், மடிக்கணினிகள் வெளிநாட்டு சிகரெட்டுகள், மேலும் பதப்படுத்தப்பட்ட குங்குமப் பூ உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  

இந்த 113 பேரிடமும் சுங்கத்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்