மேஷம்

ஜாப்ல இருக்கிறவங்களுக்கு புதுசு புதுசா பொறுப்புகள் வந்துகிட்டே இருக்கும். அதனால என்ன? நீங்களா சளைப்பீங்க? எல்லா பந்தையும் சிக்ஸர் அடிச்சு நிமிருவீங்க. ஸ்கூட்டர், அல்லது பைக், அல்லது கார், அல்லது வேன் ஏதோ ஒண்ணு வாங்கிப்புடுவீங்க. நீங்க ஸ்கூல் அல்லது காலேஜில் படிக்கிற ஸ்டூடண்டா? கொஞ்சம் பொறுப்பை உணர்ந்து படிங்கப்பா/ படிங்கம்மா. ஃபிரண்ட்ஸ் கூட சுத்துறது எல்லாம் நியாயம் தான். அதையும் பாருங்க பொறுப்பையும் கவனிங்க. சக ஊழியருங்ககூட வாக்குவாதங்களைத் தவிர்க்கறது நல்லது. குடும்பத்துல உள்ளவங்க சொல்றதைச் சாதாரணமா எடுத்துக்கிடறது நல்லது. கோபத்தைக் குறைச்சுக்கிட்டு நிதானமாய்ப் பேசுவது பிரச்சினைங்க வளராமல் தடுக்கும். குடும்பத்துல உள்ளவங்ககூட மனசு விட்டுப் பேசுவீங்க. வீட்டுக்குத் தேவையான சாதனங்களை வாங்குவீங்க. வேற்றுமதத்தவரின் ஹெல்ப் கெடைக்கும்.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 22 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

ரிஷபம்

டிராயிங் போடறவங்க கதை எழுதுறவங்க கிராமால நடிக்கிறவங்க சினிமால நடிக்கிறவங்க பாட்டு பாடுறவங்க டைரக்ஷன் செய்யறவங்க எல்லாருக்கும் இது ஜாக்பாட் வாரம். இந்த ராசியைச் சேர்ந்த லேடிஸ் வேற ஸ்டேட் அல்லது வேற நாட்டுக்கு டிராவல் செய்வீங்க. கொஞ்ச காலமா உங்களை தேடி வராமல் ஆட்டம் காட்டிக்கிட்டு இருந்த தொகை ஒண்ணு பெரும்பாலும் வந்து சேர்ந்திடும். கொஞ்சமே கொஞ்சம் தான் பாக்கி இருக்கும். வந்ததை நினைச்சு சந்தோஷப்படுங்க. வராத தொகை இன்னிக்கி டென்ஷன் ஆகிட்டு இருக்காதீங்க. உங்களால் வளர்ச்சியடைஞ்ச  சிலர் இப்போ உங்களை வந்து மெனக்கெட்டு சந்திப்பாங்க. சந்தோஷப்படுங்க. இவ்ளோ நாள் வரலைன்னாலும் இப்ப வராங்கல்ல. வியாபாரத்தைப் டெவலப் செய்வீங்க. உத்தியோகத்ததுல சில வழிமுறைகளைக் கத்துக்குவீங்க. புதிய தொழில் முயற்சிகள் லாபம் தருவதாக அமையும்.

மிதுனம்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும். சற்றே கஷ்டப்பட்டாலும் சமாளிச்சுக்குவீங்க. சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாகப் பழகிக் காரியத்துல வெற்றி அடைவீர்கள். பட்.. ஒன் திங்.. நினைவு வெச்சுக்குங்க.. உங்களுக்குன்னு குடுத்த பொறுப்பு எதையும் யார்கிட்டயும் நம்பி ஒப்படைக்காதீங்க. குடும்ப வெவகாரங்களில் சாமர்த்தியமாய் நடந்துக்கிட்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். வாகன வசதி ஏற்படும். பெண்களுக்கு அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். ஸ்டூடன்ஸ்ட்ஸ் பதற்றம் கொள்ளாமல் நிதானமாப் பாடங்களை படிக்கறது நல்லது. டீச்சர்ஸ்ஸால் அனுகூலம் உண்டாகும். வெளியூர் பயணம் ஏற்படும். கவர்மென்ட்ல ஒர்க் பண்றவங்களுக்கு புதிய நன்மைகள் கெடைக்கும். உத்யோகத்தில் சிலருக்குப் புதிய பதவி கெடைக்கலாம். செலருக்குப் புது உத்யோகமே கெடைக்கக்கூடும்.

கடகம்

தடைபட்டிருந்த பணவரத்து வந்து சேரும் வாரம். ஹெல்த் சீராகும். அடுத்தவங்களோட வெவகாரங்களில் தலையிடாமல்  கொஞ்சமாச்கசும் ஒதுங்கி செல்வது நல்லது. பிசினஸ் செய்யறவங்க கூடுதல் செலவைச் சந்திக்க நேரிடும். இட்ஸ் ஓகே. பிற்காலத்துல அதுக்கான வருமானம் வரும். பிகாஸ் அது இன்வெஸ்ட்மென்ட் மாதிரிச் செயல்படும். தேவையான ஹெல்ப் கெடைக்கும். உத்தியோகத்துல உள்ளவங்களுக்கு அதிகப்படியான பணி காரணமாக உடல் சோர்வு உண்டாகலாம். நீங்க கவனமாய் இருக்க வேண்டியது ஒரே ஒரு விஷயத்துலதாங்க. அது ஹெல்த். திட்டமிடாத காரியங்களிலும் சாதிக்கக்கூடிய வாரம். பணம் பலவழிகளிலும் வரும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நீண்டநாளாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் மிக எளிதாக முடியும். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும்.

சிம்மம்

போட்டிகளில் கலந்துக்கும்போது கொஞ்சம் கவனமாய் இருங்க.  இந்த வீக் இந்த ராசிக்காரங்களுக்குச் செலவுகள் கூடும். அது தவிரப்  பேச்சில் ரொம்பவே  நிதானம் தேவைங்க. ஓரிரண்டு குட் திங்ஸ் நடக்கும். அல்லது குட் நியூஸ் வரும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்னு சொல்ல முடியாட்டியும், நாட் பேட். எடுத்துக்கிட்ட வேலைங்க எல்லாத்தையும் ஈஸியா செய்து முடிப்பீங்க. குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சச்சரவுகள் தீரும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். அலுவலகத்தில் இருந்த டஃப் டைம் தீரும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீங்க. கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பிசினஸ் பீப்பிளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் சற்றுக் கூடுதலாய் ஏற்படும். பிசினஸ் தொடர்பாக வேண்டிய உதவிகளும், ஒப்பந்தங்களும் கிடைக்கும்.

கன்னி

நெருக்கடிகள் விலகும். வங்கியின் உதவிகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும், நிலத் தரகர்களுக்கும் எதிர்பாராத ஒப்பந்தங்கள் கிடைத்து வருமானம் ஹாப்பியா இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும் வாரம். வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். எத்தனைக்கெத்தனை செலவுகள் வருதோ அத்தனைக்கத்தனை வரும்படியும் வரும். பணவரவு கொஞ்சமே கொஞ்சம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வரும். பெண்கள் தங்கள் தேவைகள் பூர்த்தியாவதைக் கண்டு ஹாப்பி ஆயிடுவாங்க. தாமதப்பட்டு கொண்டிருந்த மேரேஜ் கன்ஃபர்ம் ஆகும். வேலையில்லாதவங்களுக்கு ஜாப் கிடைக்கும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவாங்க. சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீங்க. குடும்பத்துடன் விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீங்க.

துலாம்

சினிமா, மியூசிக் மாதிரியான ஃபீல்ட்டில் உள்ளவங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஸ்மால் விஷயங்களில்கூட சக்ஸஸ் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் மட்டும் இல்லீங்க.. எதிர்பாராத பணமும் வரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிங்க வசூலாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த ஆர்டர்ஸ் கிடைக்கும். சுப விசேஷங்கள் தொடர்பான விஷயங்கள் இன்று நல்லபடியா ஃபைனலைஸ் ஆகும். சுபச் செலவுங்க ஏற்படும். சொத்து சம்பந்தமான பிரச்னையில் ஹாப்பியான முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் யூஷுவல் நிலையே இருக்கும். பிசினஸில் வளர்ச்சி இருக்கும். புது பிசினஸ் செய்ய சான்ஸ் கிடைக்கும். எதிர்பாராத ஹெல்ப் கிடைக்கும். உறவினர்கள் கிட்டேயிருந்து ஹெல்ப் கெடைக்கும் அதே நேரத்தில் அவங்களால் சிறு உபத்திரவமும் ஏற்படலாம். உறவினர்களுக்கு  உதவிகளும் நன்மைகளும் செய்து பாராட்டுப் பெறுவீங்க

விருச்சிகம்

ஆன்மிகச் சிந்தனை மேலோங்கும். பிரயாணங்களால் செலவு ஏற்படலாம். லாண்ட்/ ஃப்ளாட் சம்பந்தபட்ட இனங்களில் புதிய முதலீடுகள் செய்ய ஏற்ற வாரம். பங்குச் சந்தையில் நிதானமாக ஈடுபடுங்கள். குழந்தைகள் வழியில் சுபச்செலவுகள் உண்டு. பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விருப்பங்கள் நிறைவேறும். தொழில்செய்பவர்கள், போதியவாய்ப்பைப்பெறுவீங்க.பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் மேலதிகாரிகளிடம் நல்ல பெயரை பெற்றுக்கொள்வீங்க. உத்தியோகத்துல உள்ளவங்களுக்குப் பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் மேலதிகாரிகளிடம் நல்ல பெயரை பெற்றுக்கொள்வீங்க. வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவைப்படும். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்.

தனுசு

மிகச் சிறந்த வாரமாக அமையும். வேலை தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட விசேஷ முடிவாகும். பிசினஸிலும், அலுவலகத்திலும் இருந்துக்கிட்டிருந்த மறைமுக எதிர்ப்புகள் மாறும். தாராளமாகச் செலவிடுவீங்க. பல பிரச்னைங்கள்லேயிருந்து விடுபட்டிருப்பீங்க. பதவி உயர்வு அல்லது இடமாற்றம் போன்றவை ஏற்படும். தொழிலில் இருந்த இக்கட்டான சூழ்நிலைகள் விலகும். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சை அடுத்த வாரத்துக்குத்‘  தள்ளிப்போடலாம். அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடரும்.  பட் யார் கிட்டயும் சவால் அது இதுன்னு விட்றாதீங்கப்பா. கலைத்துறையைச் சேர்ந்தவங்களுக்கு எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

மகரம்

பட்டங்களும் விருதுகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும். அரசால் கௌரவிக்கப்படுவீங்க. தொழில் சம்பந்தமாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வாகனம் ஓட்டும்போது ரொம்பவே கேர்                புல்லா இருங்க. எந்த விஷயமும் எடுத்தோமோ முடிச்சோமான்னு முடியாது. கொஞ்சம் இழுத்துப் பறிச்சு நிதானப்போக்குலதான் முடியும். ஆனாலும் நல்லபடியா முடியுங்க. நீண்ட நாளாக விற்க முடியாமல் இருந்த சொத்துகளை விற்பதற்கு வாய்ப்பு உள்ளது. வாகன மாற்றும் சிந்தனை ஏற்படும். புதிய வாகனம் வாங்குவதற்கான முயற்சிகளைச் சற்று தாமதப்படுத்தலாம். முயற்சிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். மனம் பரபரப்பாக இருக்கும் தேவையற்ற எண்ணங்கள் மனதில் வந்து போகாமல் பாதுகாத்துக்குங்க. பேச்சுல ரொம்பவே கேர்ஃபுல்லா இருக்கணும். எஸ்பெஷலி ஆபீஸ்ல.

கும்பம்

குடும்பத்துல இத்தனை காலமா இருந்துக்கிட்டிருந்த சண்டை சச்சரவு மெல்ல மெல்லக் காணாமல் போய் பகையா நினைச்ச சொந்தங்கள் நெருக்கமா ஆவாங்க. ஆனாலும் நீங்க பகைச்சுக்கிட்ட நல்லவங்க பலர் உங்க மேல வருத்தமா இருப்பாங்க. அவங்களைச் சமாதானப்படுத்தப்பாருங்க. எஸ்பெஷலி உங்க கூடப் பொறந்தவங்களும் உங்க சம்சாரம் அல்லது புருஷனோட கூடப்பொறந்தவங்களம் உங்க கிட்ட பகை பாராட்டாம சரி பண்ணிடுங்கப்பா. யாருடைய சாபத்தையும் வாங்கிடாதீங்க. உங்க ஹெல்த்துக்கு நல்லதில்லை. திடீர்னு கோல்ட் வாங்குவீங்க .. அல்லது கிஃப்டா வரும். இன்வெஸ்ட்மென்ட்ஸ் குட்டி போட்டு சந்தோஷப்படுத்தும். ஸ்டூடன்ட்ஸ்க்குத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீங்க. எதிர்பாராத நபர்களின் உதவிகள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 17 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.  

மீனம்

வீண் வாக்குவாதம் ஏற்படாதபடி கவனமாக இருங்கள். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வீங்க. இது உங்களுக்கு நன்மை தரும். பயணம் மூலம் பெனிஃபிட்ஸ் கெடைக்கும். கடிதப் போக்குவரத்து ( ஐ மீன் இ மெயில்தாங்க) நன்மை தரும். பழைய வீட்டைப் புதுப்பிப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வந்தாலும் சமாளிச்சு நிமிர்ந்து “பார்த்தியா.. ஜெயிச்சுட்டேன்” னு மூச்சு வாங்கச் சிரிப்பீங்க. எதிர் பார்த்த பணம் வசூலாகும். தேவையானவர்களிடம் ஆலோசனை பெறுவீங்க. உங்க எண்ணங்கள் பூர்த்தியாகக் கூடிய வாரமாக இருக்கும். எதிர்கால திட்டங்கள் தீட்டுவீங்க. முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். வாழ்வில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். எதிர்பார்த்த பேங்க் லோன் கெடைக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைங்களோ, சரும சம்பந்தப்பட்ட பிராப்ளம்ஸோ வந்தால் கவலை வேண்டாம். சரியாயிடும்.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 20 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.