மின்வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பி கொள்ளலாம்: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி

Must read

சென்னை: மின்வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பி கொள்ள தமிழக அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி அளித்து உள்ளது.

களப்பணிக்காக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிகளுக்கு 2019ம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பாணையை எதிர்த்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர்.

அதில்,  தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், புதிய தேர்வு நடத்த கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் கோரி இருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கள் நியமனத்தை உறுதி செய்த பிறகுதான் புதியதாக கேங்மேன் நிரப்ப வேண்டும். 2019ம் ஆண்டு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ஒப்பந்த ஊழியர்கள் சங்கங்கள் சார்பில்  தெரிவித்தனர்.

ஆனால், 70% பணிகள் முடிந்துள்ளதாகவும், புதியதாக கேங்மேன் நியமிக்கப்பட்டாலும், ஒப்பந்த பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதி தரப்படும் என்று தமிழக அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, மின்வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பி கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

More articles

Latest article