சென்னை அரசு மருத்துவமனை டீன் க்கு முதல் கொரோனா தடுப்பூசி

Must read

சென்னை

சென்னை ராகுல் காந்தி அரசு மருத்துவமனை டீன் முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கி உள்ளது.  இதற்காக மத்திய அரசு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு மருந்துகளைக் கொள்முதல் செய்து வருகிறது.  இந்த தடுப்பூசியின் முதல் கட்ட விநியோகம் தொடங்கப்பட்டு அனைத்து நகரங்களுக்கும் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த தடுப்பூசி போடுவதில் முதல் கட்டமாகச் சுகாதார பணியாளர்கள், வயது முதிர்ந்தோர், எதிர்ப்புச் சக்தி குறைந்தோர் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கொரோனா தடுப்பூசி போடப்படுவதைத் தொடங்கி வைத்துள்ளார்.,

சென்னையில் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜன் முதல் ஆளாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்,.  அவருக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  சுகாதார பணியாளர்கள் அனைவருக்கும் 100% தடுப்பூசி போடப்படும் என டீன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

More articles

Latest article