சென்னை: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே சீரமைப்பு பணிக்காக மூடப்பட்டிருந்த பாலாறு பாலம் நாளை திறக்கப்பட இருப்பதாக  தமிழகஅரசு  அறிவித்து உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலாறு பாலம் மழை வெள்ளத்தால் சேதமடைந்தது. இதனால், அந்த பாலன் ஒருவழியாக மட்டுமே சில மாதங்களாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பாலம் சீரமைப்பு பணிக்காக, பாலத்தை மூடுவதாக 7ந்தேதி நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, விழுப்புரத்தில் இருந்து சென்னை வரும் வாகனங்கள்,  மாற்றுவழியாக சுமார் 15 கி.மீ தூரம் சுற்றி வர உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் பாலாறு பாலத்தில் புதுப்பித்தல் பணி முடிவடைந்து உள்ளதால், நாளை (24ந்தேதி) மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட இருப்பதாக நெடுஞ்சாலை துறை தகவல் வெளியிட்டு உள்ளது. இதையடுத்து,   நாளை நள்ளிரவு முதல் இந்த பாலத்தில் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளது.