‘விக்ரம்’ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்…..!

Must read

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் ‘விக்ரம்’ . இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் கமலின் 232வது திரைப்படம் . இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரனும், இசையமைப்பாளராக அனிருத்தும் பணிபுரிந்து வருகிறார்கள்.

‘விக்ரம்’ திரைப்படம் முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. கமல் ஹாசன் நடிக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஏற்கனவே இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் சிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் பிக்பாஸ் பிரபலம் சாண்டி, விக்ரம் படத்தில் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ‘விக்ரம்’ படத்தில் பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானார்.

 

More articles

Latest article