விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த விஜய்….!

Must read

 

விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் வெற்றி பெற்றனர்.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதில் வழக்கம் போல திமுகவும், அதிமுகவும் முதல் இரு இடங்களை பிடித்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் வெற்றி பெற்றனர்.

உள்ளாட்சித் தேர்தலில் தனது படமோ, கொடியோ பயன்படுத்தக்கூடாது என்ற விஜய்யின் கட்டளையை மீறாத மக்கள் இயக்கத்தினர், வீடு வீடாக சென்று தங்களுக்கு ஆதரவு கேட்டனர்.

இந்நிலையில் தேர்தல் நடந்து முடிந்து பல நாட்கள் கழிந்த நிலையில், நேற்று வெற்றி பெற்ற மக்கள் மன்ற நிர்வாகிகளை நேரில் அழைத்து பாராட்டியதோடு, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார்.

 

More articles

Latest article