நடிகர் மோகன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துவரும் படம் ‘ஹரா’.

‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இந்தப் படத்தை இயக்குகிறார்.

குஷ்பு, யோகி பாபு, வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்தை கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.

‘ஹரா’ படத்தில் சமுதாயத்திற்கு நல்லது செய்யும் சமூக பொறுப்பு மிக்க டானாக சாருஹாசன் நடிக்கிறார்.

93 வயதாகும் சாருஹாசன் சிறிதும் தொய்வில்லாமல் தனது காட்சிகளை சிறப்பாக நடித்து கொடுத்துள்ளதாக இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சாருஹாசன் கதாநாயகனாக நடித்த ‘தாதா 87’ திரைப்படத்தை சில வருடங்களுக்கு முன் விஜய் ஸ்ரீ ஜி இயக்கியது குறிப்பிடத்தக்கது.