வேலூரில் தேர் எரிப்பு: முன்னாள் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் கைது

Must read

வேலூர்:

வேலூர் அருகே சத்துவாச்சாரியில் உள்ள இரண்டு கோவில் தேர்களுக்கு தீ வைத்தாக முன்னாள் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் அருகே உள்ள சத்துவாச்சாரியில் உள்ள கெங்கையம்மன் கோவில் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 தேர்கள் நேற்று அதிகாலையில் தீ பிடித்து எரிந்தது. இதை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து  தீயை அணைத்தனர். கோவில் தேருக்கு யாரோ மர்ம நபர்கள்தான்  தீ வைத்ததாக புகார் கூறப்பட்டது.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரை  போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், மது போதையில்  தேர்களுக்கு தீ வைத்தது தெரியவந்தது.

இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரராக பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article