2005 ம் ஆண்டு இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் வெளியாகி அதிக நாட்கள் திரையரங்கில் ஓடிய திரைப்படம் சந்திரமுகி.

தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி. வாசு இயக்க இருக்கும் படத்துக்கு ‘சந்திரமுகி 2’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் ஆகியோரின் நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் இருக்காது என்று அதன் இயக்குனர் பி. வாசு தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு பாகுபலி 1, 2, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ள கீரவாணி எனும் மரகதமணி இசையமைக்க உள்ளார்.