சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெற்றிபெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகம் சந்திரமுகி-2 படப்பிடிப்பு நேற்று துவங்கியது.

ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் சந்திரமுகி-2 படத்தின் பூஜை மைசூரு அரண்மனையில் நேற்று நடைபெற்றது.

படத்தின் இயக்குனர் பி. வாசு மற்றும் வடிவேலு, ராதிகா உள்ளிட்டோர் இந்த பூஜையில் பங்கேற்றனர்.

பூஜைக்குப் பின் படப்பிடிப்பு துவங்கியது.

இந்த படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.

2005 ம் ஆண்டு ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகம் நீண்ட இடைவெளிக்குப் பின் இப்போது துவங்கி இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.