மரவாதி

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த வலியுறுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக இந்திய தேர்தல்களில் மின்னணு வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முன்பு போல வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த கோரிக்கை அளிக்கப்பட்டது. அதற்கு தேர்தல் ஆணையர் மறுத்து விட்டார். மேலும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் என அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவரது கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திப்பை நிகழ்த்தினார். அப்போது அவர், “ஒரு தொழில்நுட்பத்தை யார் வேண்டுமானாலும் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. அதிலும் குறிப்பாக மென்பொருள் புரோக்ராம்களை உருவாக்குவார் அதை மாற்றி அமைப்பது மிகவும் எளிதாகும்.

நடுவராக செயல்படும் தேர்தல் ஆணையம் நம்பிக்கை இல்லாதவைகளை வற்புறுத்தக் கூடாது. ஜனநாயகம் என்பது மக்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதாகும். எதிரிக்கட்சிகள் மக்களின் கோரிக்கைகளை எடுத்துரைக்கின்றன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தினால் வாக்காளர் ஒப்புகைச் சீட்டு 100% வழங்கப்பட வேண்டும். அப்படி இயலாவிடில் மீண்டும் வாக்கு சீட்டு முறை அமுல்படுத்த வேண்டும். பல வளர்ந்த நடுகளே பயன்படுத்தாத மின்னணு வாக்கு இயந்திரத்தை இங்கு பயன்படுத்த தேர்தல் ஆணையம் வலியுறுத்தக் கூடாது” என உரையாற்றி உள்ளார்.