போபால்:

பொருளாதாரத்தில் நலிவடைந்த நகர்ப்புற இளைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்கள் வேலை வழங்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார்.


குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி அவர் உரையாற்றும் போது கூறியதாவது:

நகர்ப்புற இளைஞர்களுக்கு தற்காலிக வேலை வாய்ப்பு தரும் நோக்கில், ஆண்டுதோறும் 100 நாட்கள் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

தனித் திறனை வளர்த்துக் கொள்ளவும், பணிக்கு செல்லும்போது இந்த பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.

தொழில் கொள்கையிலும் மாற்றம் செய்யவுள்ளோம். எந்தவொரு நிறுவனமும், மாநில இளைஞர்களுக்கு 70 சதவீத வேலை வாய்ப்பு தந்தால் மட்டுமே, மானியம் பெற இயலும் வகையில் இந்த மாற்றம் அமையும்.
100 நாள் வேலை திட்டத்தில் சேர்வதற்கான பதிவு பிப்ரவரி 10-ம் தேதி முதல் தொடங்கும் என்றார்.