சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

நாளுக்கு நாள் தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வருவதால் பகல் நேரத்தில் மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. ஆயினும் சில இடங்களில் மிதமான மழை பெய்து சற்று வெப்பத்தைத் தணித்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வுமையம் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

அதாவது நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், கடலூர், தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.