மேஷம்

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

எல்லா வகையிலும் நல்ல பலன் உண்டாகும். மத்தவங்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லதுங்க. குடும்பத்துல இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவாங்க. வெளியூர்ப் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். தொழில் வியாபாரம் தொடர்பான டென்ஷன்ஸ் மறையும். லாபம் கிடைக்கப் பெறுவீங்க. உத்யோகத்துல இருப்பவர்களுக்கு எதிலும் நிதானமாக செயல்படுவதும், மற்றவர்களை அனுசரிச்சுக்கிட்டுப் போறதும் நல்லது. எதிர்பார்த்துக்கிட்டிருந்த பணியிட மாற்றம் கிடைக்கும். லேடீஸுக்கு சேமிக்கும் எண்ணம் ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். கலைத்துறையினருக்கு பொருளாதாரத்தில் பிரச்னை இருக்காது. புதுசு புதுசாய் சான்ஸஸ் கிடைக்கும். அரசியல்வாதிங்களுக்கு வெற்றிக்கான சான்ஸ் அதிகமாகும். கடந்தகாலத்துல உங்களை விட்டுப் போனவங்க, விரும்பி வந்து சேருவாங்க. ஸ்டூடன்ட்ஸ் பாடங்களை மிகவும் நிதானமாக படித்து மனசுல பதிய வைச்சுக்கறது நல்லது.

ரிஷபம் 

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

கொடுத்த வாக்கை காப்பாற்றுவீங்க. வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்துல உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை குறைப்பதன் மூலம் குடும்பத்துல அமைதி ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு. தொழில் வியாபாரத்துல முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீங்க. உத்யோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால எல்லாவற்றையும் திறம்படச் செய்து முடிச்சு பாராட்டு கிடைக்க பெறுவாங்க. எதிர்பார்த்த பணியிட மாற்றம் கிடைக்கும். மேலிடத்தின் ஆதரவு அனுசரணை கிடைக்கும். லேடீஸ் சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிராப்ளம்களையும் தீர்த்து விடுவாங்க. கலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது. அரசியல்வாதிகள் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பர். ஸ்டூடன்ட்ஸ், கல்வியில முன்னேற்றம் அடைய பாடுபடுவீங்க.

மிதுனம்

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய ஃப்ரெண்ட்ஸ் சேர்க்கையால் ஹெல்ப் கிடைக்கும். பணவரத்து லேசாய் இன்கிரீஸ் ஆகும். வீடு கட்டும் பணியில ஈடுபட்டிருப்ப வங்க தொடர்ந்து அதனை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். வழக்குகளில் சாதகமான பலன்களைப் பெறுவீங்க. குடும்ப வேலைகளைக் கூடுதல் நேரம் ஒதுக்கிச் செய்து முடிக்க வேண்டியிருக்குங்க. தொழில் வியாபாரம் சுமாரா இருந்தாலும் லாபம் கிடைக்கும். உத்யோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஹெல்ப் கிடைக்கும். லேடீஸ் நிதானமாகப்.. பொறுமையுடன் பேசி காரியங்களில் வெற்றி பெறுவீங்க. கலைத்துறையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அரசியல்வாதிகள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவீங்க. ஸ்டூடன்ட்ஸ்க்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும்.

கடகம்

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ரொம்ப நாளா உங்களுக்கு ஒருத்தர் கூட இருந்துக்கிட்டிருந்த மனத்தாங்கல் மறையும். பூமி தொடர்பான பிரச்னைகள் இழுபறியான நிலை இருந்த நிலை மாறும். குடும்பத்தினரோட செயல் மனதெம்பும் மகிழ்ச்சியும் தரும். வழக்குகளில் சாதகமான நிலையைப் பெறுவீங்க. குடும்பத்துல குழப்பங்கள் நீங்கி அமைதி காணப்படும். தொழில் வியாபாரத்துல இருந்து வந்த மந்தநிலை மாறும். வரவேண்டிய பணம் கைக்கு சரியான நேரத்தில் வந்து சேரும். போட்டிகளை சமாளிக்கும் திறன் அதிகரிக்கும். உத்யோகத்துல இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரிடும். நிதானமாக இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அரசியல்வாதிகள் மேலிடத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஓவர் உரிமை எடுத்துக்காதீங்க. மாணவர்களுக்குப் பாடங்களை படிப்பது பற்றிய கவலை நீங்கும்

சிம்மம்

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியத்தை மீண்டும் செய்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்வீங்க. வெளியூர் தகவல்கள் சாதகமானதாக இருக்கும். சொத்து வீடு சம்பந்தமான வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கும். குடும்பத்துல வாழ்க்கை துணை மூலம் நன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீங்க. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் வேகமாக நடைபெறும். தடைகள் அகலும். உத்யோகத்துல இருப்பவர்கள் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். லேடீஸுக்கு கடித போக்குவரத்து சாதகமான பலன் தரும். கலைத்துறையினருக்கு எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவர். அரசியல்வாதிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். மாணவர்களுக்குக் கொஞ்சம் டைவர்ஷன் ஏற்படும். அதுலேயிருந்து சீக்கிரம் விடுபட்டுப் பாடங்களை/ படிப்பை கவனிக்கறது நல்லது.

கன்னி

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

கடந்த சில வாரங்களாய் முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். எதிலேயும் கூடுதல் சிரத்தையுடன் இருப்பது நல்லது. உங்க செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவங்க விலகி விடுவாங்க. மனம் விரும்பியது போல செயல்படுவீங்க. பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும். குடும்பத்துல கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். வீட்டுல அமைதியான சூழ்நிலை காணப்படும். உறவினர் வருகை இருக்கும். குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீங்க. வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். தொழில் வியாபாரம் சீராக இருக்கும். உத்யோகத்துல இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகள் டென்ஷனை கொடுப்பதாக இருந்தாலும் நல்லபடியாக முடியும். லேடீஸுக்கு இருந்த தடைகள் நீங்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் கவனமுடன் செய்வது நல்லது. மாணவர்களுக்கு விரும்பியதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.

துலாம்

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

எடுத்த காரியங்கள் எல்லாம் படிப்படியாய்க் கை கூடச் ஆரம்பிச்சு ஹாப்பியா ஆயிடுவீங்க. சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணம் மூலம் லாபம் கிடைக்கக் கூடும். புதிய நபர்கள் நட்பு கிடைக்கும். குடும்பத்துல கொஞ்ச நாளா இருந்துக்கிட்டிருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் விதமாக சம்பவங்கள் நடக்கலாம். ஃபேமிலிக்குத் தேவையான பொருட்களை வாங்குவீங்க. தொழில் வியாபாரத்துல இருப்பவர்கள் பேச்சின் இனிமை புத்திசாலித்தனம் இவற்றால் முன்னேற்றம் பெறுவாங்க. சிலருக்குப் புதிய ஆர்டர்களோ அல்லது ஃபாரின் ஆர்டர்களோ கிடைக்கும். உத்யோகத்துல உள்ளவங்க தங்களது பேச்சினால் மேலதிகாரிகளை கவர்ந்து விடுவாங்க. லேடீஸுக்கு புதிய நபர்களின் அறிமுகம் நன்மை உண்டாகும். கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காணுவாங்க. அரசியல்வாதிங்களுக்கு அலைச்சல் இருந்தாலும் வெற்றியும் சந்தோஷமும் இருக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் மேலும் அதிக கவனம் தேவை.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 13 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் அதிக கவனம் தேவை

விருச்சிகம்

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

திட்டமிட்ட பணிகள் அனைத்தும் நல்ல விதமாய் மெல்ல மெல்ல நிறைவேற ஆரம்பிக்கும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். குடும்பத்துல கலகலப்பு காணப்படும். வாழ்க்கைத் துணை உங்களை அனுசரிச்சு நிம்மதியளிப்பாரு. தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட சற்று நல்லாவே நடக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் சுறுசுறுப்பு காட்டுவீங்க. உத்யோகத்துல உள்ளவங்க முன்னேற்ற நிலை காண்பர். மனசுல இருந்த குழப்பங்கள் நீங்கித் தெளிவு உண்டாகும். லேடீஸுக்கு மனக் குழப்பம் நீங்கும். கலைத்துறையினருக்கு வீணான குழப்பங்கள் அகலும். அரசியல்வாதிங்க நல்ல பெயர் வாங்குவீங்க. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சந்தேகங்கள் ஏற்பட்டு அதை ஒரு நல்ல வழிகாட்டி ஆசிரியர் தீர்த்துவைப்பார்.  அந்த ஆசிரியரின் அன்புக்க ஆளாவீங்க.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 15 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் அதிக கவனம் தேவை

தனுசு

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

தொய்வு நிலை நீங்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். மனசுல தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாகச் செய்து வெற்றி பெறுவீங்க. அரசாங்க ரீதியிலான ஹெல்ப் கிடைக்கப் பெறுவீங்க. குடும்பத்துல கலகலப்பு இருக்கும். கூடவே மனசுல ஒருவித கவலையும் இருந்து வரும். தொழில் வியாபாரம் விறுவிறுப்படை யும். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை அடியோடு மாறும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். தொழில் விஷயமாக எடுத்து வந்த முயற்சிகள் வெற்றி பெறும். உத்யோகத்துல இருப்பவர்கள் மேலதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது. லேடீஸுக்கு தேவையான ஹெல்ப் கிடைக்கும். கலைத்துறையினருக்கு எடுக்கும் தொழிலில் கவனம் அவசியம். அரசியல்வாதிகளுக்கு நிலவி வந்த பிரச்னைகள் மறையும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 18 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் அதிக கவனம் தேவை

மகரம்

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

மனசுல தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். நல்லது எது கெட்டது எதுன்னு பிரிச்சுப் பார்த்து செயல்படுவீங்க. எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்துல சுபச்செலவு ஏற்படும். உறவினர்களுக்கும் அக்கம்பக்கத்தினருக்கும் தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீங்க. கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் வியாபாரம் திருப்தி தரும். அரசாங்க ஹெல்ப் கிடைக்கும். உத்யோகத்துல இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலர் கட்டளையிடுகின்ற பதவி கிடைக்க பெறுவர். லேடீஸ் புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவர். கலைத்துறையினருக்கு சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். ஸ்டூடன்ட்ஸ் கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது.

கும்பம்

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

எடுக்கும் விஷயங்களில் ஸ்லோவான வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வீங்க. மனசுல புதிய உற்சாகமும், தைரியமும் உண்டாகும். குடும்பாதிபதி புதன் சஞ்சாரத்தால் குடும்பத்துல இருந்து வந்த பிரச்னைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகசப்பு மாறும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீங்க. தொழில் வியபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிணக்குகள் அகலும். உத்யோகத்துல இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்னைகள் குறையும். வெளிநாடு செல்வதற்கான சான்ஸஸ் அதிகரிக்கும். லேடீஸுக்கு முயற்சிகள் வெற்றி பெறும். கலைத்துறையினருக்கு புதிய மாற்றம் உருவாகும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு மரியாதை சிறப்படையும். மாணவர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்.

மீனம்

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

மனசுல தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து செயல்படுவீங்க. எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்துல சுபச்செலவு ஏற்படும். குடும்பத்துல இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீங்க. கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் வியாபாரம் திருப்தி தரும். அரசாங்க ஹெல்ப் கிடைக்கும். உத்யோகத்துல இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலர் கட்டளையிடுகின்ற பதவி கிடைக்க பெறுவர்.லேடீஸ் புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவர். கலைத்துறையினருக்கு சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். ஸ்டூடன்ட்ஸ் கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது.