சென்னை:
ரும் 26ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளக்தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் சில இடங்களில், லேசான மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நிலவியது. கோவை, கடலுார், மதுரை, திருப்பத்துார், திருச்சி, திருவள்ளூர் மற்றும் வேலுார் மாவட்டங்களில், காலை நேர வெப்பநிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகம் பதிவானது. வரும், 25, 26ம் தேதிகளில், தமிழக கடலோர மாவட்டங்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.