லண்டன்: இந்தியா-பாகிஸ்தான்  அணிகளுக்கு இடையே இன்று நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியின் போது  ரூ. 2000 கோடி அளவுக்கு சூதாட்டம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்தியாவும்-பாகிஸ்தானும் ஐசிசி தொடர் ஒன்றின் பைனலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு (சாம்பியன்ஸ் டிராபி பைனலில் ) இன்று மோதுகின்றன. இந்த போட்டியை உலகம் முழுதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.  இதையடுத்து சூதாட்ட தரகர்களும் முழு வீச்சில் களம் இறங்கியிருக்கிறார்கள்.

பெட்டிங் தரகர்கள் இந்தியாதான் வெற்றி பெறும் என கருதுகிறார்கள். ஆகவே இந்தியா வெற்றி பெறும் என பெட்டிங் கட்டுவோருக்கு 100 ரூபாய்க்கு ரூ.147தான் பரிசு தொகையாக அளிப்பார்களாம்.  அதுவே, பாகிஸ்தான் வெற்றி பெறும் என பெட்டிங் கட்டுவோருக்கு 100 ரூபாய்க்கு, 300 ரூபாய் பரிசாக அளிக்கப்படுமாம்.

ஆகவே பெரும்பாலானோர் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என பெட் கட்டுவார்கள் என கூறப்படுகிறது.

அவ்வாறு அதிகம் பேர் பெட் கட்டினால், இந்தியாவை வெற்றிபெறச் செய்ய சூதாட்ட தரகர்கள் கோல்மால்கள் செய்ய முயற்சி செய்வார்கள். அல்லது  . இந்தியா வெல்லும் என்று அதிகம் பேர் பெட் கட்டினால், பாகிஸ்தானை வெற்றிபெறச் செய்ய தங்கள் அஸ்திரங்களை பயன்படுத்துவார்கள்.

சுமார் ரூ.2000 கோடி அளவுக்கு சூதாட்டங்கள் நடைபெறும் என மதிப்பிடப்பட்டுள்ளதால், சூதாட்ட புரோக்கர்கள் எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள். அதாவது கிரிக்கெட் வீரர்களுக்கு பணம் அளத்து, தாங்கள் சொல்வதுபோல விளையாடச் செய்ய முயற்சிப்பார்கள்.

ஆகவே இன்று விளையாடும் இந்திய பாகிஸ்தான் அணி வீரர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.

இந்தியா விளையாடும் போட்டிகள் மீது ஒரு வருடத்திற்கு கட்டப்படும் சூதாட்டத் தொகை அளவு 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என ஒரு கணக்கீடு தெரிவிக்கிறது.

இந்தியா-பாகிஸ்தான் பைனலில் மோதினால்தான் ஐசிசி, பிசிசிஐ மட்டுமின்றி சூதாட்ட தரகர்களும் பணத்தை அள்ள முடியும். பாகிஸ்தான் எப்படியோ பைனலுக்குள் வர சூதாட்டம்தான் காரணம்” என்று  அந்த நாட்டு முன்னாள் வீரர் அமிர் சொகைல் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.