மும்பை:

டந்த 14ந்தேதி உலகம் முழுவதும் காதல் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முத்தம் கொடுக்க விழா தேவையா என்றும் எதற்காக இதுபோன்ற விழாக்களை கொண்டாடுகிறீர்கள் என்று கேள்வி விடுத்தார்.

ஆர்.ஏ. பிதார்கல்லூரியின் வர்த்தக மற்றும் பொருளாதாரம் துறையின் பிளாட்டினம் ஜூபிலி விழாவை தொடங்கி வைத்து  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உரையாற்றினார். அப்போது,  மாட்டிறைச்சி சாப்பிடவும், முத்தம் கொடுக்கவும்  ஏன்  விழா எடுக்கிறீர்கள். இது எதற்கு? என்று மாணவர்களிடையே  கேள்வி எழுப்பினார்.

உங்களுக்கு மாட்டிறைச்சி தேவையென்றால் அதை தாராளமாக சாப்பிடலாம்… அதுபோல முத்தம் கொடுக்க வேண்டுமா கொடுங்கள்… இதற்காக யாரிடமும் நீங்கள் அனுமதி பெற தேவையில்லை. ஆனால், இதற்காக ஒரு விழா எடுக்கப்பட்டு அதை கோலாகலமாக கொண்டாடும்போதுதான் பிரச்சினைகள் உருவாகின்றன. இதுபோன்ற விழாக்கள் தேவையா? என்று மாணவர்களிடையே கேள்வி எழுப்பினார்.

அதுபோல மாணவர்களாகிய உங்களில் ஒருசிலர், நமது இந்திய பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசுகிறீர்கள்… அப்சல் குருவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கிறீர்கள்… நாடு எங்கே போகிறது… இங்கே என்னதான் நடக்கிறது…. என்றும் அவர் பேசினார்.

துணை ஜனாதிபதியின் பேச்சு மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. துணை ஜனாதிபதி பங்கு பெற்றதை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.