புதுடெல்லி: காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, படிநிலைகளிலான வியூகத்தை வகுத்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தவரை வெளிநாட்டு உதவிபெறும் பயங்கரவாதமும், வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை, வெளிநாட்டினர் ஊடுருவலும் பெரிய சிக்கல்களாக உள்ளன. தற்போது இவற்றை தீர்க்கும் வகையில் படிநிலை வியூகத்தை வெளியிட்டுள்ளது உள்துறை அமைச்சகம்.

பிரிவினைவாதிகள் மற்றும் அவர்களுக்கான நிதியாதாரங்களை குறிவைப்பது, கல்லெறியும் நபர்களை ஆதரிக்கும் மற்றும் மத்திய அரசின் மேம்பாட்டு முயற்சிகளை நீர்த்துப்போகச் செய்யும் தொண்டு நிறுவனங்கள் (இந்த நிறுவனங்கள்தான் கல்லெறியும் நபர்களை பின்னாளில் ஆயுதப் பயிற்சி பெறுவோர்களாக மாற்றுகின்றன) போன்றவை.

இவைதவிர, எல்லைப்புறத்தில் நிலவும் பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டு, வெளியிலிருந்து நாட்டிற்குள் ஊடுருவும் தீவிரவாதிகளும் திட்டத்தில் அடக்கம். இந்திய ராணுவம் நடத்திய பாலகோட் தாக்குதலால், முஸாஃபராபாத் பகுதியிலிருந்த பல தீவிரவாத முகாம்கள், மேற்கே இன்னும் நகர்ந்து, ஆஃப்கானிஸ்தான் எல்லையருகே கொண்டுசெல்லப்பட்டு விட்டன.

வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை, எல்லைப்புற போக்குவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவருதல் மற்றும் குடிமக்களுக்காக தேசிய பதிவேடு(NRC) போன்ற நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.