டில்லி

த்திய அரசு 21 மசோதாக்களை மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.

வரும் 21 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. மத்திய அரசு இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டு உள்ளது. தொடரில் 21 மசோதாக்களை அறிமுகம் செய்யப் பட்டியலிடப்பட்டு உள்ளதாக மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அவற்றில் டில்லி அதிகாரம் தொடர்பான அவசரச் சட்டம், டிஜிட்டல் தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா, வன பாதுகாப்பு திருத்த மசோதா போன்ற முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

தவிர தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா, ஜன விஸ்வாஸ் திருத்த மசோதா, கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் தாக்கல் செய்யப்படும் என மக்களவை செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.