டில்லி

ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மண்டல பூஜைகளுக்காக தற்போது சபரிமலை ஆலய நடை திறக்கப்பட்டுள்ளது.  ஐயப்பன் ஆலயம் செல்லும் பக்தர்கள் கடந்த கார்த்திகை மாதம் நுதல் தேதி முதல் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.

எனவே நேற்று முதல் பூஜைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் சந்தனம், துளசி மாலை, காவி, நீலம் மற்றும் கருப்பு நிறத்திலான வேஷ்டி, துண்டுகள் ஆகியவற்றின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதாவது ஜனவரி 15ம் தேதி வரை விமானத்தில் இருமுடி கொண்டு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருமுடிகளை முறையான பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின்னர் எடுத்துச் செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.