குழந்தைகளுக்கு முகக் கவசம் தேவை இல்லை : புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்

Must read

டில்லி

கொரோனா குறித்து குழந்தைகளுக்கான திருத்தப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இது மூன்றாம் அலையாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறி உள்ளனர்.  மூன்றாம் அலையில் அதிக அளவில் சிறார்கள் பாதிக்கப்படலாம் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது.   எனவே மத்திய அரசு குழந்தைகளுக்கான திருத்தப்பட்ட புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில் காணப்படுவதாவது :

5 வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகளுக்கு முகக் கவசம் தேவையில்லை

6 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெற்றோரின் நேரடி மேற்பார்வையில் முகக் கவசம் அணியலாம்

12 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள், பெரியவர்களைப் போல முகக் கவும் அணிய வேண்டும்.

அறிகுறியற்ற, லேசான பாதிப்புகளுக்கு சிகிச்சை அல்லது நோய் தடுப்புக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிந்துரைக்க கூடாது

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரத்தம் உறைதல் ஏற்படும் அபாயத்தைக் கண்காணிக்க வேண்டும்.

லேசான தொற்றில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழக்கமான குழந்தை பராமரிப்பு, ஊட்டச்சத்து மற்றும் உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும்

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article