டில்லி

வெளிநாடுகளில் பணி புரியும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அரசு அதிகாரிகள் அந்நாட்டுப் பிரமுகர்களிடம் இருந்து பரிசுகளைப் பெற்றுக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கடந்த 1968 ஆம் ஆண்டு இந்தியச் சேவை நடத்தை விதிகள் மாற்றப்பட்டன.  அந்த விதிகளின்படி வெளிநாடுகளில் பணிபுரியும் ஐ ஏ எஸ் மற்றும் ஐபிஎச் அதிகாரிகள் தங்கள் நெருங்கிய உறவினர்கள் மற்றும் பணிக்குச் சம்பந்தம் இல்லாதவர்களிடம் மட்டும் இருந்து பரிசுகளை ஏற்க அனுமதி அளிக்கப்பட்டது.   தவிர வேறு வெளிநாட்டுப் பிரமுகர்களிடம் இருந்து பெரும் பரிசுகளை வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என விதி உள்ளது.

தவிர இவ்வாறு உறவினர்கள் மற்றும் பணி தொடர்பில்லாத நண்பர்களிடம் இருந்து திருமணங்கள், ஆண்டு விழாக்கள்  சமய நிகழ்ச்சிகள் ஆகிய நாட்களில் பரிசுகள் பெறலாம்   அந்த பரிசின் மதிப்பு ரூ.25000க்கு அதிகமாக இருந்தால் அதை அரசிடம் அளித்து அனுமதி பெற்ற பிறகே ஏற்க வேண்டும் எனவும் இந்த விதிமுறைகள் தெரிவிக்கின்றன.,

தற்போது மத்திய அரசு இந்த விதிமுறைகளை சுமார் 50 ஆண்டுகளுக்குப்  பிறகு மாற்றி உள்ளது.   அதன்படி ஐ ஏ எஸ், ஐபிஎஸ், ஐஎஃப் எஸ் அதிகாரிகள் எந்த ஒரு இந்தியப் பிரதிநிதிகள் குழுவில் இருந்தாலும் இல்லை என்றாலும் வெளிநாட்டுப் பிரமுகர்களிடம் இருந்து பரிசுகள் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   மேலும் இந்த பரிசுகளின் மதிப்பு எவ்வளவாக இருப்பினும் அதை அதிகாரிகளே வைத்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.