டில்லி

துவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்ட 15-18 வயதான சிறார்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா பரவாமல் தடுக்க மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.  இவற்றில் முக்கியமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி அனைத்து மாநிலங்களிலும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.   குறிப்பாக தற்போது 60 வயதைத் தாண்டியோர், இணை நோய் உள்ளோர், முன் களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் மற்றும் சிறார்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது.

மத்திய சுகாதாரத்துறைச் செயலர் மாநிலங்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில், “இந்தியாவில் சிறிது சிறிதாக கொரோனா மூன்றாம் அலை குறைந்து வருகிறது.   இதற்கு முக்கிய காரணம் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டதே என கூறப்படுகிறது.  இதுவரை சுமார் 166.68 கோடிக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 3ஆம் தேதி முதல் 15-18 வயது சிறார்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.   இதுவரை 15-18 வயதான சிறார்களில் சுமார் 4.66 கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  இவர்களுக்கு கோவாக்சின் தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது.   கோவாக்சின் தடுப்பு மருந்து முதல்  டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ் களுக்க்கு இடையே  28 நாட்கள் இடைவெளி போதுமானதாகும்.

எனவே இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்ட சிறார்களில் சுமார் 42 லட்சம் பேர் கடந்த 31 ஆம் தேதி அன்று இரண்டாம் டோஸ் தடுப்பூசி  போட்டுக் கொள்ளத் தகுதி பெற்றுள்ளனர்.   எனவே இவர்களுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா ஹ்டடுப்பூசிகளை உடனடியாக போட மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..  தவிர முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டு 28 நாட்கள் ஆன சிறார்களுக்கு உடனடியாக இரண்டாம் டோஸ் போட மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.