ஜெய்ப்பூர்:

ங்கக்கடலில் உருவான ஃபானி புயல் ஆந்திர கடற்கரை வழியாக சென்று ஒடிசாவை புரட்டிப் போட்டு விட்டு வலு குறைந்த நிலையில் நள்ளிரவு மேற்குவங்கத்தை மிரட்டிவிட்டு சென்றது.

ஃபானி புயலுக்கு ஒடிசா பயங்கரமான சேதத்தை சந்தித்துள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் வீசிய சூறைக்காட்டில் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. அங்கு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்த நிலையில்,  பாதிப்புக்குள்ளான மாநிலங்களுக்கும், மக்களுக்கும்  மத்தியஅரசு அனைத்து உதவிகளையும்  உதவி செய்யும் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மோடி, அங்குள்ள கரோலி, சிக்கார் பகுதி களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது,  தேர்தல் பிரசாரத்திற்காக நாம் இங்கே கூடிய நிலையில் சில ஊர்களில் மக்கள் புயல் மழையால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்க அரசுகளுக்கு மத்தியஅரசு தேவையான உதவிகளை செய்து வருவதாகவும்,  தேசிய பேரிடர் மேலாண்மை மையம், இந்திய கடலோர காவல் படை,  ராணுவம், கடற்படை, விமானப்படை  என அனைத்து படைகளையும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மத்திய அரசு அனுப்பி உள்ளது. மேலும்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து உதவி செய்யும் என்ற அவர், துயர் துடைக்கும்  என்று தெரிவித்தார்.