சென்னை: சிமெண்ட் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், பல இடங்களில் கட்டுமானப் பணிகள் முடங்கி உள்ளது. கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்களில் தங்கியிருந்து பணி செய்யலாம் என அனுமதி வழங்ககப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கட்டுமானப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஒரு மூட்டை சிமென்ட்  விலை ரூ. 3509 வரையில் இருந்த நிலையில், தற்போது ரூ.460-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ரூ.6 ஆயிரத்துக்கு விற்ற 100 கிலோ கம்பி, ரூ. 7 ஆயிரமாகவும், ரூ.8,500-க்கு விற்ற 3 யூனிட் ஜல்லி ரூ.9,500-ஆகவும், ரூ.23 ஆயிரத்துக்கு விற்ற 3 ஆயிரம் எண்ணிக்கை கொண்ட ஒரு லோடு செங்கல் ரூ. 28 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது. பெயிண்ட் விலையும் தரத்துக்கு ஏற்ப லிட்டருக்கு ரூ. 60 முதல் ரூ. 100 வரை அதிகரித்துள்ளது. திடீர் விலையேற்றத்தால் கட்டிட உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைடுத்து சிமென்ட் உள்பட கட்டுமானப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழகஅரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசும், தமிழகஅரசு சிமென்ட் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  அம்மா சிமென்ட் விற்பனையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும், தேவை குறைந்தநிலையில் கட்டுமானப் பொருட்களின் விலையை உயர்த்தி உள்ளனர். இதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், இன்று செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு, சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டு சிமெண்ட் விலை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அஎன்றார்.

மேலும், சென்னை, கோவைக்கு இணையாக மதுரை, தூத்துக்குடி தொழில் வழிச்சாலையை மேம்படுத்த தொழில் துறை திட்டமிட்டுள்ளது என்று கூறியவர்,  மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் போன்றவற்றை கொண்டு வர தொழில் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக மதுரையை மையமாக கொண்டு தொழில் சார்ந்த வல்லுநர்கள், நிறுவனங்களை உள்ளடக்கிய மன்றத்தை அமைத்து தொழில் சாத்தியக்கூறுகள் தொடர்பாக தொடர்ந்து விவாதித்து தொழிற்கொள்கை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

ஜூலை 15 ம் தேதிக்கு பிறகு புதிய தொழில் முதலீட்டாளர்களை தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்புவிடுக்கப்படும் என்றவர், நாளை முதல் தொல்லியல் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் கீழடி கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட இடங்களில் நேரில் ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறினார்.