திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தைச்  சேர்ந்தவர்கள் காளியப்பன் –  மனைவி விஜயா தம்பதி. இவர்களுக்கு பதினைந்து வயதில் மோகன்ராஜ், 13 வயதில் , வேல்முருகன் ஆகிய இரு மகன்களும், 8  வயதில் காளீஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.

குடும்பத்தலைவர் காளியப்பன் சில வருடங்களுக்கு முன்பு மறைந்துவிட்டார்.  விஜயாதான், வீட்டு வேலை செய்து தனது மூன்று குழந்தைகளை வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் விஜயாவிற்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டதன் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில்  உடல்நிலை மோசமடைந்ததால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் விஜயா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

தாயின் உடலை அடக்கம் செய்யக்கூட பணம் இன்றி தவித்த அக்குழந்தைகள்,  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களின் பிச்சை எடுத்து உடலை அடக்கம் செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த சோகக் காட்சி ஊடகங்களிலும் சமூகவலைதளங்களிலும் பரவி காண்போரை அதிர்ச்சி அடையச் செய்தது.

இந்த நிலையில், கிடைத்த இன்னொரு தகவல் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதாவது காளியப்பன் – விஜயதா தம்பதிகள் காதலித்து சாதி மறுப்பு திருணம் செய்தவர்கள்.  அவர்களது குடும்பத்தை இரு வீட்டாரும் ஒதுக்கிவைத்துள்ளனர்.

தந்தை இல்லாத சூழலில் தாயும் இறந்துவிட்ட சோக தருணத்தில்கூட அக்குழந்தைகளுக்கு உறவினர்கள் உதவ வராததற்குக் காரணம் இதுவே என்பதுதான் அந்த அதிர்ச்சி தகவல்.

வருடா வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளுக்காக எவ்வளவோ செலவழித்து வாழ்த்து அட்டை, கேக், பரிசுகள் வாங்கி இணையரை மகிழ்விப்போர் உண்டு.

அத்தொகையில் ஒரு பகுதியை… காதலால்  இன்று அநாதைகளாக தவிக்கும் இந்த மூன்று சிறுவர்களுக்கு அனுப்பி உதவலாமே…

உங்களுக்குத் தெரியாதது இல்லை..

இணையருக்கு தரும் உச்சபட்ச பரிசு குழந்தைகள்தான்..

அப்படிப்படிப்பட்ட மூன்று குழந்தைகள் தங்கள் காதல் பெற்றோர் இன்றி தவிக்கின்றன..

உதவுங்களேன் காதலர்களே…!

மூன்று குழந்தைகளில் இளையவரான காளீஸ்வரியின் வங்கிக் கணக்கு விபரம்:

 Name: kaleeshwari

a/c no; 3315101006527

branch: vedahandur

canara bank

ifsc; 0003315

மேற்கொண்டு தகவல் அறிய:

மோகன்ராஜ்,

4/135,  மேட்டுப்பட்டி, சித்தூர் அஞ்சல், வேடசந்தூர் தாலுகா, திண்டுக்கல் மாவட்டம்.

அலைபேசி: 8098947144