சென்னை: அதிமுக பாஜக இடையே மோதல் முற்றி, பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக தலைவர்கள் பேசி வந்த நிலையில், இன்று  அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூடுகிறது. இன்றைய கூட்டத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று இன்று மாலை 4 மணிக்குஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இந்த கூட்டத்திற்கு, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், திமுக கழக நிர்வாகிகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த பல வருடங்களாக பாஜக அதிமுக கூட்டணி தொடர்ந்து வரும் நிலையில், சமீப காலமாக மாநிலம் முழுவதும் அண்ணாமலை நடத்தி பெரும் பாதயாத்திரைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், அண்ணா பிறந்தநாளன்று நடைபெற்ற கூட்டத்தில் அண்ணா குறித்து பாஜக பேசியதற்கு அதிமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அப்போது ஜெயக்குமார் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என பேசியது பரபரப்பை ஏற்படத்தியது. இதையடுத்து, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பேசினார்கள்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில்,  இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அவசரமாக கூட உள்ளது. , இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்த முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.