தமிழக மாணவர் தற்கொலை: சி.பி.ஐ., விசாரணைக்கு ஸ்டாலின் கோரிக்கை

சென்னை:

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தை சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்.

மத்திய அரசு இந்த வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்து குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிய வேண்டும்.

கல்விக்காக டில்லி செல்லும் தமிழக மாணவர்கள் தொடர்ந்து மரணமடைவதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


English Summary
cbi enquiry need on mystery death of jnu stunt muthukrishnan- stalin urge