சென்னை:

மூக செயற்பட்டாளர் முகிலன் கடந்த 5 மாதங்களாக காணாமல் போன நிலையில், கடந்த வாரம் திருப்பதி ரயில் நிலையத்தில், ரயில் நிலைய காவலர்களால் கைது செய்யப்பட்டு, காட்பாடி காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

முகிலன் காணாமல் போன விவகாரம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில், முகிலன் திருப்பதி ரயில் நிலையம் வந்தது எப்படி, அவர் எங்கு கைது செய்யப்பட்டார் என்பது குறித்து தமிழக சிபிசிஐடி காவல்துறையினர் திருப்பதி ரயில்வே காவல்துறையினரிடம் விசாரித்து வருகின்றனர்.

சமூக செயற்பாட்டாளரானமுகிலன்,  கடந்த பிப்ரவரி  மாதம் 15-ம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், ஸ்டெர்லை கலவரம், துப்பாக்கி சூடு தொடர்பாக, `கொளுத்தியது யார்? – ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள்’ என்ற தலைப்பில் பல வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார்.

அதையடுத்து, இன்று இரவு சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலமாக மதுரைக்குத் திரும்பவிருந்த முகிலன் திடீரென மாயமானார். அவரை கண்டுபிடிக்க கோரி பலர் வழக்கு தொடர்ந்த நிலையில்,  சென்னை உயர்நீதிம ன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. முகிலை கண்டுபிடிக்க கோரி பல போராட்டங்களும் நடைபெற்றன.

விசாரணையின்போது, முகிலன் வடநாட்டில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்து வந்த நிலையில், கடந்த வாரம்  திருப்பதி ரயில்வே ஸ்டேஷனில் முகிலன் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. முகிலனின் சொந்த ஊரை சேர்ந்த சண்முகம் என்பவர், இந்த விவகாரத்தை போனில் முகிலனின் மனைவிக்குத் தெரிவித்திருக்கிறார். முகிலனைக் கைது செய்த திருப்பதி ரயில்வே போலீஸார், அவரை ரயில் மூலமாக காட்பாடிக்கு அழைத்துச் சென்று தமிழக போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் சென்னை போலீசார்  அவரை பாலியல் வழக்கு ஒன்றில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், தலைமறைவான முகிலன் எங்கே இருந்தார், அவரை கடத்தியது யார், அவர் எப்படி திருப்பதி ரயில் நிலையம் வந்தார், என்பது குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் திருப்பதி ரயில்வே போலீசாரிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.