சென்னை

வரும் 22 ஆம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அரசு அதிகாரிகள் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் பங்கு பெறுவது வழக்கமாகும்.  இந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கு  இடையில் உள்ள காவிரி நீர் தொடர்பான பிரச்சினைகள் விவாதிக்கப்படுவது வழக்கமாகும்.  வரும் 22 ஆம், தேதி இந்த கூட்டம் காணொலி மூலம் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு மாநிலங்களில் பெய்துள்ள மழையின் அடிப்படையிலும் அணைகளில் உள்ள நீரின் இருப்பைப் பொறுத்தும் நீர் பங்கீடு செய்யப்படும்.  மேலும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே ஒவ்வொரு மாநிலத்துக்கு எவ்வளவு நீர் அளிக்க வேண்டும் என வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.  அதன்படி எந்தெந்த மாதம் எவ்வளவு நீர் திறக்கப்பட வேண்டும் எனவும் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது.

தற்போது தமிழகத்தில் நடைபெற உள்ள குறுவை சாகுபடிக்கான நீர் திறப்பு குறித்து ஆணையத்திடம் கோரிக்கை எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும் ஆணையத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும் கர்நாடக அரசு மேகதாது அணை விவகாரத்தை எழுப்புவது வழக்கமாகும்.  இம்முறையும் தமிழகத்தின் புதிய அரசிடம் இது குறித்து கோரிக்கை வைக்கலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.