சென்னை

ரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் பணிகளில் 3 மேம்பாலங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில்  மாதவரம் –சோழிங்க நல்லூர் இடையே 118.9 கிமீ தூரத்தில் அமைய உள்ளது.   இந்த பணி முடிந்தால் சென்னை நகரத்தில் பெரும்பாலான பகுதிகள் மெட்ரோ ரயில் மூலம் இணைக்கப்படும்.  இந்த மெட்ரோ ரயில் செல்லும் பாதையில் 3 மேம்பாலங்களும் ஒரு தடம் பிரிப்பு ஆகியவை அமைக்கப்பட உள்ளன.

ஏற்கனவே இந்த பகுதியில் போரூர் மற்றும் மேடவாக்கம் பகுதியில் மேம்பாலப் பணிகள் தொடங்கிய நிலையில் தற்போது கத்திப்பாரா சந்திப்பில் ஒரு தடம் பிரிப்பு மற்றும் மேடவாக்கம் மற்றும் ராமாபுரம் இடையே மற்றொரு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளன.   இந்த மேம்பாலம் 3 கிமீ தூரத்துக்கு அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு இந்த பகுதியைக் கடக்க மிகவும் உதவியாக இருக்கும்.    இந்த மேம்பால கட்டுமான திட்டம் முதலில் நெடுஞ்சாலைத் துறையினரால் அறிவிக்கப்பட்டதாகும்.

தற்போது மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கும் நெடுஞ்சாலைத் துறையினர்  இந்த மேம்பாலப் பணிகளுக்காக ரூ.350 கோடி வழங்க உள்ளனர்.  இந்த மேம்பாலம் ராமாபுரம் சந்திப்பு, டிஎல்எஃப் சந்திப்பு, முகலிவாக்கம் சந்திப்பு மற்றும் மவுண்ட் பூந்தமல்லி சாலை வரை அமைக்கப்பட உள்ளது.   இந்த மேம்பாலம் அமைக்கப்பட்ட பிறகு சுமார் 1.5 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பயனடைவார்கள் எனக் கூறப்படுகிறது.

இந்த மேம்பாலங்களுக்கான தூண்கள் 2 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட உள்ளன.  இந்த பாலம் கட்டி முடிக்க சுமார் 2 ஆண்டுகள் ஆகலாமென கூறப்படுகிறது.  இதற்கான நில கையகப்பணிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளது.   ஏற்கனவே வடபழனியில் மெட்ரோ ரயில் நிர்வாகத்தால் கட்டப்பட்ட மேம்பாலத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்தது போல் இங்கும் குறைய வாய்ப்புள்ளது.