டில்லி:

ச்சநீதி மன்ற உத்தரவுபடி  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக அதிகாரிகள் இன்று திடீர் டில்லி சென்றுள்ளனர். அங்கு மத்திய நீர்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்துவார்கள் என தெரிகிறது.

இதற்கிடையில், கர்நாடக தேர்தல் தேதியை இன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கப் போவதாக அறிவித்து உள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு திட்டமிட்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்துக்குள் அமைக்க வேண்டும் என  உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்சநீதி மன்ற கெடு வரும் மார்ச் 29-ம் (வியாழக்கிழமை) தேதியுடன் முடிவடைய இருக்கிறது.

மத்தியஅரசு இதுவரை கா.மே.வா. அமைப்பது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலையில், தமிழக அரசும், மற்ற அரசியல் கட்சியினரும் வற்புறுத்தி வரும் நிலையில், தமிழக விவசாயிகள் டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு இன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

இதுபோன்ற இக்கட்டாக நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி,  மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக தமிழக அதிகாரிகள்  இன்று டில்லி செல்கின்றனர்.

தமிழக பொதுப்பணி துறை முதன்மை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் தலைமையில் தமிழக அதிகாரிகள்  குழு டில்லி சென்று, மத்திய நீர்வளத்துறை  அதிகாரிகளை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.