சென்னை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக விவசாய சங்கங்கள் இன்றும், நாளையும் ரெயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
stalin
இந்த போராட்டத்துக்கு ஆளுங்கட்சியை தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.
விவசாய சங்கங்கள் ரயில் மறியல் போராட்டம் அறிவித்துள்ளதால், தமிழகம் முழுவதும்,முக்கிய ரயில் நிலையங்களில், ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றம் உள்ளூர் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங் களில், 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள் ளனர். போராட்டத்தால், பயணிகள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில், ரயில்களை இயக்கவும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், போலீசாருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
இன்று காலை முதலே ரெயில் மறியலில் தமிழகம் முழுதும் விவசாயிகள் அரசியல் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஆவேச மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் ஒட்டு மொத்த பத்திரிகையாளர்களும், பெரம்பூரை நோக்கியே உள்ளனர். ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடப்பதால், மாவட்ட செயலாளர் சேகர்பாபு ஆயிரக்கணக்கில் ஆட்களை திரட்டி வந்திருந்தார். தளபதி தலைமையில் பெரம்பூரில் ரயில் மறியல் நடத்த வந்தவர்கள் சிறிது நேரம் கோஷம் கொடுத்துவிட்டு செய்வதறி யாமல் நின்றனர்.
ரெயிலை மறிக்கவந்தவர்கள் சாலையை மறித்து கொண்டு நிற்றார்கள். கோஷமும் இல்லை. அதன்பிறகு ஸ்டாலின் வந்தவுடன் போராட்டம் ஆரம்பமானது.
சென்னை, பெரம்பூர் ரயில்வே ஆடிட்டோரியத்திலிருந்து ரயில் நிலையம் நோக்கி திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஊர்வலமாக சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ரயில் மறியல் போராட்ட ஊர்வலத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர்பாபு, தாயகம்கவி, ரெங்கநாதன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
stalin3
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.