சென்னை: தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் தமிழகஅரசு தெரிவித்து உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலத்துறை, சட்டம், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பான அறிவிப்புகள் விவாதங்கள் நடைபெறுகின்றன.
இன்றையஅமர்வில், பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில், தமிழ்நாட்டில் சாதிவாரிய மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மத்தியஅரசுக்கு அழுத்தம் தரப்படும்என்றும், , தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என கு வலியுறுத்தப்படும் என தெரிவித்து உள்ளது.
மேலும்,, பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் மத்திய அரசின் பணிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு பெற வழிவகுக்கும் வகையில் வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தும் என்றும் சிறுபான்மையினர் நலத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]