பணமில்லா பரிவர்த்தனை: 'ஆதார் பேமெண்ட் ஆப்' ரெடி!

Must read

டில்லி,
ந்தியாவில் பணமல்ல பண பரிவர்த்தனையை  ஊக்கவிக்கும் பொருட்டு ‘ஆதார் பேமண்ட் ஆப் ‘ எனும் ஆண்ட்ராய்டு செயலி அறிமுகம் செய்யப்படுகிறது.
மொபைல் மூலம் பண பரிவர்த்தனைகள் செய்ய ஏதுவாக இந்த ஆதாரார் பேமண்ட் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி எண்ணப்படி, இந்தியாவை  டிஜிட்டலாக மாற்ற பல்வேறு  தொழில்நுட்ப வசதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறும்படி வற்புறுத்தி வருகிறார். அதற்காகவே, கடந்த நவம்பர் 8ந்தேதி முதல் பழைய 500  மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்து, நாட்டு மக்களிடையே பணப்புழக்கத்தை குறைந்துவிட்டார்.
தற்போது பொதுமக்களும் கொஞ்சம் கொஞ்சமாக டிஜிட்டல் மயத்திற்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாகத்தான் தற்போது ‘ஆதார் பேமெண்ட் ஆப் ‘ எனும் ஆண்ட்ராய்டு செயலி அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்த செயலி நடைமுறைப்படுத்தப்பட்டால் மாஸ்டர் கார்டு, விசா போன்ற கார்டுகளுக்கு வசூலிக்கப்படும் சேவை கட்டணம் இருக்காது என தெரிகிறது.
இதை பயன்படுத்த விரும்பும் வியாபாரிகள் ஆதார் பேமண்ட் ஆப்-ஐ  தங்களது ஸ்மார்ட்போனில்  இன்ஸ்டால் செய்து, அதனுடன் பயோமெட்ரிக் ரீடர் இணைத்தால் போதுமானது.
பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களின்  ஆதார் எண்யை பயன்படுத்தி, வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருந்து, வியாபாரிகளின் கணக்குக்கு பணம் வந்துவிடும்.
தற்போது நாடு முழுவதும் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக ஆதார் எண் பதிய வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வங்கி கணக்கில்  ஆதார் எண்  பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள்  மட்டுமே இந்த  ஆதார் பேமெண்ட் செயலியின் சேவையை பயன்படுத்த முடியும்.
இந்தியாவில் இதுவரை மொத்தம் 40 கோடி பேர் தங்களுடைய ஆதார் எண்களை வங்கி கணக்கு களுடன் இணைத்துள்ளனர். மீதமுள்ளவர்களும் உடனடியாக ஆதார் எண்ணை பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

More articles

Latest article