கொல்கொத்தா: ரூபாய் நோட்டு பிரச்சனை சரிசெய்யப்பட்டு சகஜ நிலை திரும்ப இன்னும் 4 அல்லது 5 மாதங்கள்கூட ஆகலாம் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (BEFI) பொதுச்செயலர் பி.கே.பிஸ்வாஸ் கூறியுள்ளார்.

notes3

நாட்டில் உள்ள நான்கு கரன்ஸி அச்சகங்களும் ஓய்வு உறக்கமின்றி தொடர்ந்து செயல்பட்டு பணத்தை அச்சடித்து கொடுத்தாலும் நிலமை சீராக இன்னும் 4 அல்லது 5 மாதங்கள் பிடிக்கும் என்பது உறுதி. இந்த வாரத்தை விட அடுத்த வாரம் இன்னும் நிலமை மோசமடைந்து மக்கள் சம்பள பணத்தை எடுக்க திண்டாடும் நிலை வரலாம் என்கிறார் பி.கே.பிஸ்வாஸ்.
மேலும், சில இடங்களில் வாடிக்கையாளர்கள் பொறுமையிழந்து வங்கிகளை சேதப்படுத்தும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன. வேறு சில இடங்களில் பணப் பற்றாக்குறையால் வங்கிகள் இயங்க இயலாத சூழல் ஏற்ப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள சல்போனி கரன்சி அச்சகத்துக்கு இப்பொழுதுதான் பிரிண்ட்டிங்குக்கான நிற சாயங்களும், பிற உபகரணங்களும் சென்று சேர்ந்திருக்கின்றன. அதை வைத்து அவர்கள் எப்போது அச்சிட ஆரம்பிப்பார்களோ தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.