சென்னை:
மிழ்நாடு மின் தொடர் அமைப்புக் கழகத்தின் முன்னாள் இயக்குனர் ரவிச்சந்திரன் மீது டெண்டர் மோசடி தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகத்தின் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ரவிச்சந்திரன்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், 230 கிலோ வாட் மின் கேபிள் பழுதை சீரமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டதில் மோசடி நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் அம்பலமானது.

இதையடுத்து, ரவிச்சந்திரன் மீது டெண்டர் மோசடி தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.