சென்னை; சென்னை புறநகர் பகுதிகளில் 100 % கால்வாய் பணிகள் முடிந்து விட்டது. தமிழ்நாடு முழுவதும் தரமான சாலைகள், தரமான பாலங்கள் கட்டப்படுகிறது: நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு  கூறினார்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு பெய்த பருவமழையின்போது, சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் அல்லல் பட்டனர். இதையடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மற்றும் மாநிலத்தின் பல நகரங்களில் மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து, மழைநீர் வடிக்கால் அமைக்கும் பணியை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக சென்னையின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்குவது தடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு,   தமிழ்நாடு முழுவதும் தரமான சாலைகள், தரமான பாலங்கள் கட்டப்பட்டு வருதாக கூறியவர், கட்டப்பட்ட வரும் வடிகால் பணிகள்,  அடைப்பு இன்றி மழைநீர் செல்லும் வகையில்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் எளிதில் செல்லும் என்றவர், சென்னை புறநகர் பகுதிகளில் 100 % கால்வாய் பணிகள் முடிந்து விட்டது எனவும் கூறினார்.

மாங்காடு அருகே மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி… பரபரப்பு…