கலைஞருக்கு அழைப்பு – எழுத்தாளர் – கவிஞர் : ராஜ்குமார் மாதவன்

சூரியனும் கண்டதில்லை

சந்திரனும் பூத்ததில்லை
சொர்கமானு கண்டதில்லை
நரகமானு அறிஞ்சதில்லை
எங்கே போனாயோ !
நீ – அங்கே போனாயோ !

எழுந்தா எதுக்கச்சொல்லுங்க !
கலைஞரை- கையெழுப்பி அழைச்சு வாருங்க !

நூறு ரூவா எரிபொருளு
பத்து- நூறு ரூவா எரிவாய்வு
சுல்லி பொறுக்க காடும் இல்லீங்க
சுட்டெரிக்க அடுப்புமில்லீங்க
எரிஞ்சதெல்லாம் ஏழையோட வாழ்வுதானுங்க
எழுந்தா எதுக்கச்சொல்லுங்க !
கலைஞரை- கையெழுப்பி அழைச்சு வாருங்க !

நீட்ட தடுக்கவில்லீங்க
மீத்தேனை முறிக்கவில்லீங்க
நியூட்ரினோ முடிப்பாரில்லீங்க
எட்டுவழிச்சாலை தடுப்பாரில்லீங்க
எழுந்தா எதுக்கச்சொல்லுங்க !
கலைஞரை- கையெழுப்பி அழைச்சு வாருங்க !

படிச்சா வேலையில்லீங்க
பசிச்சா சோறுமில்லீங்க
கேட்க நாதியில்லீங்க
சாதி சாகவில்லீங்க
சமயம் சபையேறி ஆடுதுங்க
எழுந்தா எதுக்கச்சொல்லுங்க !
கலைஞரை- கையெழுப்பி அழைச்சு வாருங்க !

விலைவாசி எங்கோபோகுதுங்க
விவசாயம் செத்தேபோச்சுதுங்க
உழைச்சவன் கோவணம் தங்கலீங்க
தன்மானசிங்கமெல்லாம் டயருக்கு கீழேங்க
எழுந்த எதுக்கச்சொல்லுங்க !
கலைஞரை- கையெழுப்பி அழைச்சு வாருங்க !

சூரியனும் கண்டதில்லை
சந்திரனும் பூத்ததில்லை
சொர்கமானு கண்டதில்லை
நரகமானு அறிஞ்சதில்லை
எங்கே போனாயோ !
நீ – அங்கே போனாயோ !

எழுந்தா எதுக்கச்சொல்லுங்க !
கலைஞரை- கையெழுப்பி அழைச்சு வாருங்க !