டெல்லி:

த்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட் டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்  வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை  பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உ.பி. மாநிலத்தில் உள்ள தாஜ்மஹாலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் சுமார் 60 சதவிகிதம் குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது. அதுபோல அசாம் மாநிலமும் 90 சதவிகிதம் சுற்றுலாப்பயணிகளை இழந்துள்ளது.

மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் பதவி ஏற்றதில் இருந்து மக்கள் விரோத நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அத்துடன், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக், என்ஆர்சி, குடியுரிமை திருத்த சட்டம் போன்றவைகளில் நாட்டில், போராட்டங்கள் நீடித்து வருகிறது.

மக்களிடையே மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையிலான பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு  பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஆகஸ்டு மாதம் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப் பட்டதைத் தொடர்ந்து, அங்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 80 சதவிகிதம் அளவுக்கு குறைந்து விட்டதாக ஜம்மு காஷ்மீர் சுற்றுலாத்துறை தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் தற்போது குடியுரிமைதிருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும்  போராட்டங்களால், வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக கூறப்படு கிறது.

பல மாநிலங்களில் இந்த போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 25க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில்,  அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இஸ்ரேல், சிங்கப்பூர், கனடா மற்றும் தைவான் உள்பட  7  நாடுகள், இந்தியாவுக்கு, சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று  தங்களது நாட்டினர்களுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது டிசம்பர் வெக்கேஷன் காலம் என்பதால், பொதுவாக வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இந்தியாவுக்கு குவிவது வழக்கம். ஆனால்,  இந்த ஆண்டு சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை பெருமளவு குறைந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 2லட்சம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை இழந்துள்ளதும், ஏராளமானோர் தங்களது பயணங்களை ரத்து மற்றும் ஒத்தி வைத்துள்ளதாகவும்  அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஆக்ரா நகரில் அமைந்துள்ள தாஜ்மஹால், ஒவ்வொரு ஆண்டும் 6.5 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது,  ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி மைதானத்திற்குள் நுழைய 1,100 ரூபாய் (சுமார் $ 15) செலுத்துகிறார். இதனால் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 14 மில்லியன் வருமானம் கிடைக்கிறது. ஆனால், தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் போராட்டங்கள், இங்கு சுற்றுலாப்பயணிகளின் வருகையை பெருமளவு குறைத்துள்ளது.

வன்முறை மற்றும் அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், அதிகாரிகள் ஆக்ராவில் மொபைல் இணைய சேவைகளை நிறுத்தி வைத்துள்ளனர். இதுபோன்ற செயல்கள் சுற்றுலாப்பயணிகளுக்கு அசவுகரியை ஏற்படுத்தி உள்ளதால், அவர்களை தங்களது வருகையை ரத்து செய்துவிடுவதாக, ஆக்ரா பகுதியை சேர்ந்த பிரபல ஹோட்டல்கள் தெரிவிக்கின்றன.

தாஜ்மஹாலைச் சுற்றியுள்ள ஆடம்பர ஹோட்டல்களிலும், விருந்தினர் மாளிகைகளிலும் ஏராளமானோர் தங்களது வருகையை கடைசி நேரத்தில்  ரத்து செய்துள்ளதாகவும், இது  நாட்டின் பொருளாதார வளர்ச்சியை  மேலும் குறைத்துவிட்டது என்று கவலைத் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து தெரிவத்துள்ள ஆக்ரா சுற்றுலா மேம்பாட்டு அறக்கட்டளையின் தலைவர் சந்தீப் அரோரா, இங்கு இணையசேவைகள்  முடக்கப்பட்டுள்ளதால்,  ஆக்ரா  சுற்றுலாவை சுமார் 50-60% வரை பாதித்துள்ளது” என்று தெரிவித்து உள்ளார்.

அதுபோல,  நாட்டில் பரவி வரும் வன்முறை காரணமாக,  இந்தியா முழுவதும் ஒரு குழுவாக பயணம் செய்யும் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளின்  குழு, தங்களது இந்தியப் பயணத்தில்  20 நாள் பயணத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது.

சுற்றுலா வந்துள்ள  அனைவரும் ஓய்வுபெற்றவர்கள்,  எங்களுக்கு பயணம் மெதுவாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும். ஆனால், சமீப காலமாக இங்கு நடைபெறும் வன்முறைகள் குறித்த செய்தித்தாள் தலைப்புகள் தங்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால், நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டதை விட விரைவில் கிளம்புவோம்” என்று  டேவ் மில்லிகின் என்பவர் தெரிவித்து உள்ளார்.

உ.பி. மாநிலத்தில் உள்ள பிரபல காதல் சின்னமான 17 ஆம் நூற்றாண்டின் பளிங்கு நினைவுச்சின்னம் தாஜ்மஹா லுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது,  60% சரிவு ஏற்பட்டுள்ளது” என்று தாஜ்மஹால் அருகே ஒரு சிறப்பு சுற்றுலா காவல் நிலையத்தை மேற்பார்வையிடும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் என்பவர் தெரிவித்து உள்ளார்.

இதனால், “இந்திய மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயமின்றி இங்கு வரலாம் என்றும், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்குகிறோம் என்று நாங்கள் உறுதி அளித்தும், பலர் இங்கு வர விரும்பவில்லை என்றும் கூறினார்.

அதுபோல அசாமிலும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் சரிந்து உள்ளதாகவும், உலகின் மிகப்பெரிய கொம்புகள் கொண்ட காண்டாமிருகங்களை பார்வையிட டிசம்பர் மாதத்தில் சராசரியாக 5லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள், ஆனால், “இந்த முறை, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறை காரணமாக, சுமார் 90% சுற்றுலா குறைந்து விட்டது என்று மாநில சுற்றுலாத்துறை தெரிவித்து உள்ளது.\