சென்னை: கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில்  இருந்து பேருந்து இயக்கப்படுவதால், கோயம்பேட்டில் இந்து கிளம்பும் வகையில் முன்பதிவு செய்த  பயணிகளுக்கு வித்தியாச கட்டணத்தை பேருந்து நடத்துனர் வழங்குவார் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வசிக்கும், பண்டிகைகாலங்களின்போது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.  அவ்வாறு செல்லும் பயணிகளின் வசதிக்கா, தமிழ்நாடு அரசு, மற்றும் தனியார் நிறுவனங்கள் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது இதனால்,  தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களின்போது சென்னை  கோயம்பேடு பேருந்து நிலையம்  உள்பட பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்கும் வகையில்,   கிளாம்பாக்கத்தில் 400 கோடி ரூபாயில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் டிசம்பர் 30-ம் தேதி திறக்கப்பட்டதுடன், அடுத்த நாளானே டிசம்பர் 31-ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

டிசம்பர் 31ந்தேதி அதிகாலை 4 மணிக்கெல்லாம் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயங்கத் தொடங்கியது. புதிய பேருந்து முனையத்தில் இருந்து மக்கள் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதனால் கோயம்பேட்டில் இருந்து சொந்த ஊர் செல்ல முன்பதிவு செய்துள்ள பயணிகள், தற்போது கிளாம்பாக்கம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்து கட்டண விவரமும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, வித்தியாச கட்டணத்தை  திரும்ப வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறிய அமைச்சர் சிவசங்கர், வித்தியாச கட்டணத்தை பயணத்தின்போது பயணிகளுக்கு பேருந்து நடத்துனர்கள் வழங்குவார்கள் என்று தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையில், சென்னையில் எந்த மூலையில் இருந்தாலும்  கிளாம்பாக்கத்தில் புதியதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை எளிதாக வந்தடைய எந்தெந்த வழித் தடங்களைப் பயன்படுத்தலாம் என்பது குறித்து சி.எம்.டி.ஏ தெரிவித்துள்ளது.

அடையாறு முதல் கிண்டி ரயில் நிலையம் வரை மாநகர பேருந்தில் வரலாம். கிண்டி டூ தாம்பரம் வரை மின்சார ரயிலில் வந்து , தாம்பரம் டூ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாநகர பேருந்தில் வரலாம்.

அடையாறு டூ கிண்டி ரயில் நிலையத்திற்கு மாநகர பேருந்தில் வர வேண்டும். கிண்டி டூ வண்டலூர் அல்லது ஊரபாக்கம் வரை மின்சார ரயிலில் வரலாம். நடந்தோ அல்லது ஷேர் ஆட்டோவிலோ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வரலாம்

கோயம்பேடு டூ கிளாம்பாக்கத்திற்கு நேரடியாக பேருந்தில் வரலாம். (அல்லது) கோயம்பேட்டிலிருந்து விமான நிலையம் வரை மெட்ரோவில் வந்துவிட்டு திரிசூலத்திலிருந்து தாம்பரத்திற்கு மின்சார ரயிலில் வர வேண்டும்.

தாம்பரத்திலிருந்து மாநகர பேருந்தில் கிளாம்பாக்கம் வரலாம். (அல்லது)

கோயம்பேட்டிலிருந்து விமான நிலையம் வரை மெட்ரோவில் வந்துவிட வேண்டும். பின்னர், திரிசூலத்திலிருந்து வண்டலூர் அல்லது ஊரப்பாக்கத்திற்கு மின்சார ரயிலில் வந்து நடந்தோ அல்லது ஷோ ஆட்டோவில் கிளாம்பாக்கம் வரலாம்.

வேளச்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல, வேளச்சேரியிலிருந்து கிண்டி ரயில் நிலையத்திற்கு மாநகர பேருந்து மாநகர பேருந்தில் இருந்து வந்தடைய வேண்டும். பிறகு கிண்டியிலிருந்து தாம்பரத்திற்கு மின்சார ரயிலில் வந்து அங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கு மாநகர பேருந்தில் வர வேண்டும்.

(அல்லது)  வேளச்சேரியிலிருந்து கிழக்கு தாம்பரம் வரை மாநகர பேருந்தில் அங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கு எம்டிசி பேருந்துகளில் வர வேண்டும்.

(அல்லது)  வேளச்சேரியிலிருந்து கிழக்கு தாம்பரம் வரை மாநகர பேருந்தில் வந்து அங்கிருந்து வண்டலூர் அல்லது ஊரப்பாக்கத்திற்கு மின்சார ரயிலில் வந்து அங்கிருந்து நடந்தோ அல்லது ஷேர் ஆட்டோவிலோ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடையலாம்.

சோழிங்கநல்லூர் பகுதியில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்ல,  சோழிங்கநல்லூரிலிருந்து தாம்பரம் கிழக்கு (பெரும்பாக்கம் வழியாக) மாநகர பேருந்தில் வர வேண்டும். அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாநகர பேருந்தில் செல்ல வேண்டும்.

(அல்லது) சோளிங்கநல்லூர் முதல் தாம்பரம் கிழக்கு வரை பெரும்பாக்கம் வழியாக செல்லும் மாநகர பேருந்தில் செல்ல வேண்டும். தாம்பரத்திலிருந்து வண்டலூர் அல்லது ஊரப்பாக்கத்திற்கு மின்சார ரயிலில் செல்ல வேண்டும். அங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கு நடந்தோ அல்லது ஷேர் ஆட்டோவிலோ செல்ல வேண்டும்.

கேளம்பாக்கம் பகுதியில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல எளிதான வழித்தடம்

1.கேளம்பாக்கத்திலிருந்து நேரடியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லலாம். கேளம்பாக்கத்திலிருந்து வண்டலூர் ரயில் நிலையம் வரை மாநகர பேருந்திலும் அங்கிருந்து நடந்தோ அல்லது ஷேர் ஆட்டோவிலோ கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு செல்லலாம்.

பூந்தமல்லி பகுதியில் இருந்து கிளாம்பாக்கம் நிலையம் செல்ல எளிதான வழித்தடம்

1. பூந்தமல்லி டூ தாம்பரத்திற்கு குன்றத்தூர் வழியாக செல்லும் பேருந்தில் ஏற வேண்டும். அங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கு மாநகர பேருந்து இருக்கிறது. 2.பூந்தமல்லியில் இருந்து குரோம்பேட்டைக்கு கத்திபாரா வழியாக செல்லும் பேருந்தில் வந்து அங்கிருந்து வண்டலூர் அல்லது ஊரப்பாக்கத்திற்கு மின்சார ரயிலில் சென்று அங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கு நடந்தோ அல்லது ஷேர் ஆட்டோவில் செல்லலாம்.

போரூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் செல்ல எளிதான வழித்தடம்

1.போரூரில் இருந்து தாம்பரம் வரை மாநகர பேருந்தில் செல்லலாம். அங்கிருந்து மாநகர பேருந்தில் கிளாம்பாக்கம் செல்லாம்.

2.போரூரிலிருந்து கிண்டி ரயில் நிலையம் வரை மாநகர பேருந்தில் செல்லலாம். அங்கிருந்து வண்டலூர் அல்லது ஊரப்பாக்கம் வரை மின்சார ரயிலில் செல்லலாம். அங்கிருந்து ஷேர் ஆட்டோவிலோ அல்லது நடந்தோ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடையலாம்.

குன்றத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியிலிருந்து கிளாம்பாக்கத்திற்கு செல்வதற்கான எளிதான வழித்தடம்

1.கோயம்பேட்டிலிருந்து தாம்பரம் வரை பேருந்தில் வர வேண்டும். பின்னர் அங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர பேருந்துகள் உள்ளன. (அல்லது) 2.குன்றத்தூரிலிருந்து குரோம்பேட்டைக்கு பேருந்தில் வந்து அங்கிருந்து வண்டலூர் அல்லது ஊரப்பாக்கத்திற்கு மின்சார ரயிலில் வந்து அங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கு நடந்தோ அல்லது ஷேர் ஆட்டோவிலோ செல்ல வேண்டும்.

பிராட்வேயில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல ளிதான வழித்தடம்  :

1.பிராட்வேயிலிருந்து கிளாம்பாக்கத்திற்கு நேரடியாக பேருந்து இருக்கிறது. 2.உயர் நீதிமன்றத்திலிருந்து விமான நிலையம் வரை மெட்ரோவில் வந்துவிட்டு அங்கிருந்து வண்டலூர் அல்லது ஊரப்பாக்கம் பேருந்தில் ஏறி நடந்தோ அல்லது ஷேர் ஆட்டோவிலோ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வரலாம்.

மீஞ்சூர் மற்றும் எண்ணூர் பகுதியில் இருந்து கிளாம்பாக்கம் வருவதற்கான வழி:

1.மீஞ்சூர், எண்ணூரிலிருந்து கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்தில் பயணிக்கலாம். 2.மீஞ்சூர் அல்லது எண்ணூரிலிருந்து பீச் ஸ்டேஷனுக்கு பேருந்தில் வந்து அங்கிருந்து வண்டலூர் அல்லது ஊரப்பாக்கத்திற்கு ரயில் நிலையத்தில் வரலாம். அங்கிருந்து நடந்தோ அல்லது ஷேர் ஆட்டோவிலோ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடையலாம்.

மாதவரம், செங்குன்றம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியினர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருவதற்கான வழி:

! 1.மாதவரத்திலிருந்து கோயம்பேடு பஸ் நிலையம் வந்து அங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கு அரசு பேருந்தில் வரலாம். 2.செங்குன்றத்திலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.