சென்னை: தொலைதூர பேரூந்து கட்டணம் உயர்வு பட்டியல் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது, முதல்வர் அனுமதி வழங்கியதும் கட்டண உயர்வு அமலுக்கு வரும் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று கடந்த வாரம்  தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதத்தின்போது, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால், நிதிநெருக்கடி காரணமாக,  பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் நேரு கூறியுள்ளார். இது குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளதுடன், கடுமையான விமர்சனங்களையும் ஏற்படத்தி உள்ளது. மேலும் பேருந்து கட்டண உயர்வு தொடர்பான பல்வேறு கட்டண உயர்வு பட்டியல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.

இந்த நிலையில், பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், தொலைதூர பயண பேருந்து கட்டண உயர்வு பட்டியல் அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு பேருந்துகளில் உள்ள தொலைதூர பயண பேருந்து கட்டண விகிதத்தை ஆராய்ந்து, அதற்கு ஏற்ப பட்டியல் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பேருந்து கட்டண உயர்வு குறித்து இதுவரை முதலமைச்சர் உத்தரவிட இல்லை என்றும் போக்குவரத்து கழகம் ரூ.48,500 கோடி கடனில் உள்ளது எனவும் அமைச்சர் கூறினார். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இவ்வாறு கூறினார்.