ராமேஸ்வரம்,

னுஷ்கோடியில் ரூ.9½ கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய சாலையை அப்துல்கலாம் மணிமண்டபம் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து  53 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ்கோடிக்கு ரூ.19 கட்டணத்தில் அரசு  பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதை பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள்  மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

1964ல் ஏற்பட்ட புயலில்  தனுஷ்கோடியோ தலைமட்டமாகி கடலுக்குள் புகுந்தது. அங்கிருந்த ரெயில்வே ஸ்டேஷன், சர்ச், விநாயகர் கோயில் உள்ளிட்ட பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. ஆயிரத்துக்கும் மேலான சுற்றுலா பயணிகள், மீனவர்கள் உயிரிழந்தனர்.

இதையடுத்து தனுஷ்கோடி – இலங்கை கப்பல் போக்குவரத்து முடங்கியது. அதுபோல ராமேஸ்வரம் – தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு தனுஷ்கோடிக்கும் அரிச்சல் முனைக்கும் இடையே சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக ரூ.59 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. அதைத் தொடர்ந்து சாலை அமைக்கப்பட்டத.

இந்த சாலையை, 27ந்தேதி, அப்துல் கலாம் நினைவுநாளன்று பிரதமர் மோடி, போக்குவரத்துக்காக திறந்து வைத்தார்.

இதையடுத்து,  ராமேஸ்வரத்தில் இருந்து முகுந்தராயர்சத்திரம் வரை செல்லும் அரசு டவுன் பஸ்கள், நேற்று முதல் தனுஷ்கோடி, அரிச்சல்முனை வரை சென்று வந்தன,.

தற்போது அரிச்சல்முனைக்கு ரூ.19 கட்டணத்தில் டவுன் பஸ்சில் செல்வதால் பொதுமக்கள், சுற்றுப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுவரை தனுஷ்கோடிக்கு செல்ல வேண்டுமென்றால், தனியார் வேன் மற்றும் ஜீப் மூலம்தான் செல்ல முடியும். இதற்காக நபர் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரூ.100 வசூலித்து அடாவடி செய்து தனியார் வாகன டிரைவர்கள் அடாவடி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.