அமிர்தசரஸ்:

பாகிஸ்தான் நாட்டுக்கா  உளவு பார்த்ததாக உ.பி. மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பஞ்சாபில் எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேசம் மொராதாபாத் நகரை  சேர்ந்த முகமது சாரூக் என்ற 21-வயதுடைய இளைஞர் பஞ்சாப் எல்லையில் உள்ள மபோகே என்ற இடத்திலுள்ள காவல் சோதனைச் சாவடி அருகில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நிலையில், எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையின்போது, அவரிடம் பாகிஸ்தான் சிம்கார்டு உடைய மொபைல் போன் மற்றும், பாகிஸ்தான் தொடர்பு எண்கள் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். அவர் பாகிஸ்தான் நாட்டுடன் உள்ள பயங்கரவாதி அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

மேலும்,  முகமது சாரூக்கிடம் நடத்திய விசாரணையின் போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் மேல் விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று அபிநந்தன் பஞ்சாப் எல்லையான வாகாவில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தான் உளவாளி கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.