ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில், துல்கர் சல்மான், அதிதி ராவ் நடிக்கும் படம் ‘ஹே சினாமிகா’. தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் படம் தயாராகிறது.


காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் தோன்ற, மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகி உள்ளது. இதை, கோவிந்த் வசந்தா பாடி இசையமைத்துள்ளார், பாடலை, மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

இது குறித்து பிருந்தா மாஸ்டர், “நீங்கள் காதல் கீதங்களின் ரசிகராக இருந்தால், நிச்சயமாக உங்களால் ‘மேகம்’ என துவங்கும் இந்த பாடலை மிஸ் செய்ய முடியாது” என்றார்.

பாடலைப் பற்றி பேசிய துல்கர், “மேகம் பாடல், மிகவும் உற்சாகமாக இருப்பதோடு புதிய அதிர்வையும் ஏற்படுத்துகிறது. அதிதியும் நானும் இந்த பாடலில் பிருந்தா மாஸ்டரின் நடன அமைப்பில் ஆடியுள்ளோம்,” என்றார்.

அதிதி கூறுகையில், “துடிப்பான பாடலான மேகம் பாடல், உங்களை பரவசமடைய செய்யும்,” என்றார்.

இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் 2022 மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.