[embedyt] https://www.youtube.com/watch?v=dkt1zRCVjvc[/embedyt]

 

சமூக வலைதளங்களில் அவ்வப்போது புது புது சேலஞ்ச்கள் வைரலாகுவது வழக்கம் .

அந்த வகையிள் தற்போது ’பாட்டில் கேப் சேலஞ்ச்’ என்ற புதிய சேலஞ்சில் பிரபலங்கள் பாட்டிலில் உள்ள மூடிகளைக் கால்களால் உதைக்கும் வீடியோவை சமூக வலைதளங்களான டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர்.

ஐஸ் பக்கெட் சேலஞ்சுக்குப் பிறகு கிகி சேலஞ்ச், மொமொ சேலஞ்ச், 10 இயர் சேலஞ்ச் என இண்டர்நேஷனல் சேலஞ்சுகளும் தோசை சேலஞ்ச், நில்லு நில்லு சேலஞ்ச் போன்ற உள்ளூர் சேலஞ்சுகளும் வைரல் ஆகின.

இதுபோன்ற மற்றொரு சேலஞ்சுதான் ’பாட்டில் கேப் சேலஞ்ச்’. ஆனால் இது அனைவரும் செய்யக்கூடிய அளவுக்கு சாதரணமாக இல்லை. பாட்டிலில் உள்ள மூடிகளை கால்களால் உதைப்பதே பாட்டில் கப் சேலஞ்ச். இதனை வெற்றிகரமாகச் செய்து பிரபலங்கள் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் .

இதை முதலில் தொடங்கியது யுஎஃஏ குத்துச்சண்டை சாம்பியனான மேக்ஸ் ஹோலோவே. அவரை தொடர்ந்து இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் , ஆக்‌ஷன் கின் அர்ஜுன் , ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் புகழ் ஜேசன் என பலரும் இதை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர் .