கோவை கம்யூனிஸ்டு அலுவலகம்மீது குண்டு வீச்சு! விஎச்பி நிர்வாகி கைது!

கோவை,

கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக விஷ்வ இந்து பரிசத் நிர்வாகி சரவணக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 17 ஆம் தேதி கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் அதிகாலையில், பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

இது தொடர்பாக 3 தனிப்படைகளை அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சியையும் காவல் துறையினர் வெளியிட்டனர்.

அதில், சந்தேகபடும்படியாக  முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் நபரின்  காட்சி பதிவாகியிருந்தது.

இதைத்தொடர்ந்து அந்த நபரை  தேடி வந்த போலீசார் தற்போது ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், அவர் ஆர்எஸ்எஸ் நிர்வாகி என்பது தெரிய வந்துள்ளது.

கோவை  மேட்டுப்பாளையம் பகுதியை  சேர்ந்த சரவணக்குமார் என்பவர்தான் கம்யூனிஸ்டு அலுவலகத்தில் வெடிகுண்டு வீசிவிட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவர் விசுவ இந்து பரிசத் அமைப்பின் கோவை வடக்கு மாவட்ட அமைப்பாளரான இருக்கிறார். லண்டனில்  மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்த இவர், யோகா பயிற்சியாளராக இருப்பதும் தெரிய வந்துள்ளது.


English Summary
Bombing at Coimbatore Communist Office, VHP executive arrested