தருமபுரி: பா.ஜ.க கொட்டத்தை அடக்கவேண்டும்  என தருமபுரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட  முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாக கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே இருக்கிறது. இதனால் தமிழக  அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் முழுவீச்சில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமாருடன்  நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாலை  தக்காளி மார்க்கெட் பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். மேலும்,  பொதுமக்களிடம்  உதய சூரியன் சின்னத்துக்கு  வாக்கு சேகரித்தார். வீதிவீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சருடன் கைகுலுக்கியும் செல்பி எடுத்தும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில், மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் நாம் கருப்புக் கொடி போராட்டம் நடத்தும் போது நாடாளுமன்றத்தில் நமது எம்.பி.க்கள் போராடுவார்கள். அனைத்து எம்.பி.க்களும் நாளை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்க உத்தரவிட்டுள்ளேன். போராட்டத்தில் வெல்லும் வரை நமது உரிமைக் குரல் அடங்கக் கூடாது.

எடப்பாடி பழனிசாமி தற்போது தமிழ்நாட்டின் முதுகிலும் குத்தப் பார்க்கிறார். தருமபுரியில் 3 மாணவிகளை உயிரோடு எரித்துக் கொன்றது அதிமுக. 3 மாணவிகளை எரித்த 3பேரை விடுதலை செய்த அதிமுக, பாஜகவுடன் கரம் கோர்த்துள்ளார் அன்புமணி. நாடு முழுக்க இடஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்படும் பாஜகவுடன் அன்புமணி கூட்டணி. அதிமுக, பாஜகவுக்கு கூஜா தூக்கி தமிழ்நாட்டுக்கும் ராமதாசுக்கும் துரோகம் செய்தவர் அன்புமணி.

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் தொகுதி எண்ணிக்கையை குறைக்க நினைக்கும் பாஜகவின் கொட்டத்தை அடக்க வேண்டும். குனிந்தே பழகிய பழனிசாமிக்கு தமிழ்நாடு தலைநிமிர்வது பிடிக்கவில்லை என தெரிவித்தார்.

[youtube-feed feed=1]