மும்பை:  மாநில அதிகாரி மீது சேறு வாரி வீசி இழிவுபடுத்திய முன்னாள் பாஜக நிர்வாகியும், தற்போதைய மகாராஷ்டிர மாநில பா.ஜ.க அமைச்சருமான ராணேவுக்கு  ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்த தீர்ப்பு, அதிகாரிகளை அவமதிக்கும், அரசியல்வாதிகள் மற்றும்  அமைச்சர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.

மகாராஷ்டிர மாநில அமைச்சராக உள்ள,  பா.ஜ.க அமைச்சர் நிதேஷ் ராணேவுக்கு நீதிமன்றம் ஒரு மாத சிறை தண்டனை விதித்து அதிரடி காட்டி உள்ளது.

முன்னதாக,  கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக நிர்வாகியான, தற்போதைய மகாராஷ்டிர மாநில பா.ஜ.க அமைச்சர் நிதேஷ் ராணே,  மும்பை-கோவா நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியைப் பார்வையிடச் சென்றுள்ளார். அப்போது சாலையின் தரம் மோசமாக இருப்பதாக அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுள்ளார். அப்போது திடீரென அமைச்சர் நிதேஷ் ரானே மற்றும் அவரது ஆதரவாளர் அங்கிருந்த சேற்று நீரை, அதிகாரி பிரகாஷ் ஷெடகர் மீது ஊற்றி அவரை அவமானப்படுத்தி மிரட்டியுள்ளனர்.

இதனால்  பாதிக்கப்பட்ட அதிகாரி நீதிவமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு சிந்துதுர்க் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நடந்து வந்தது. பல கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில்,  வழக்கை விசாரித்த நீதிபதி வி.எஸ்.தேஷ்முக் அதிர தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பில்,   அரசு ஊழியரை பொதுவெளியில் இழிவுபடுத்தியது குற்றமெனக் கூறி அமைச்சர் நிதேஷ் ராணேவுக்கு ஒரு மாத சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டத்தைத் தன் கையில் எடுக்கக்கூடாது என்றும், மக்கள் பிரதிநிதிகள் அரசு ஊழியர்களைக் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.

முப்பை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் உள்ள பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியாளரகளுக்கு பாடமாகவும் அமைந்துள்ளது.

[youtube-feed feed=1]